அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்டத்தில் ஏப். 2 மற்றும் 9 ஆம் தேதிகளில் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்படும் வாக்காளர் சேவை மையங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. நந்தகுமார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை புதிதாக சேர்க்கவும், பெயர் மற்றும் முகவரிகளில் திருத்தம் செய்யவும், புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் கோரி விண்ணப்பிக்கவும் வாக்காளர் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்காளர் மையங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் செந்துறை உள்ளிட்ட 5 வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கி வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் வசதிக்காகவும் அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் ஏப். 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்காளர் சேவை மையங்கள் இயங்கும். சம்மந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் விளம்பரங்கள் செய்யப்படும்.

இந்த வாக்காளர் சேவை மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய 7, பெயர் மற்றம் முகவரியில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் 8 மற்றும் 8 ஏ, புதிய வாக்காளர் அட்டை பெற படிவம் 1 பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

அனைத்துப் படிவங்களையும் ஆன்லைனில் பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் வசதிகள் செய்து தரப்படும். எனவே, இந்த வாய்ப்பை வாக்காளர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-