அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 24 மையங்களில் 8742 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர்.

பிளஸ்–2 தேர்வு

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அதன்படி

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வுகள் 24 மையங்களில் பிளஸ்–2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 8,742 பேர் அரசுப் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளான நேற்று 4,385 மாணவர்களும், 4,357 மாணவிகளும் என மொத்தம் 8,742 பேர் கலந்துகொண்டு மொழிப்பாடதேர்வு எழுதினர். இதில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 10 மாணவர்கள், 12 மாணவிகள் என மொத்தம் 22 பேர் தேர்வு எழுதினர்.

மேலும் 28 ஆண்கள், 40 பெண்கள் என மொத்தம் 68 நபர்கள் தனிதேர்வர்களாக தேர்வு எழுதினர்.

62 பறக்கும் படை

தேர்வு மையத்திற்கு முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளராக 32 தலைமை ஆசிரியர்களும், 24 தேர்வு மையத்திற்கும் துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலராக 33 ஆசிரியர்களும், தேர்வு மையத்திற்கு 8 வழித்தடங்களில் வினாத்தாள்களை பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்ல 8 வழித்தட அலுவலர்களும், தேர்வு அறைக் கண்காணிப்பாளராக 521 ஆசிரியர்களும், தேர்வுகள் நடைபெறுவதை கண்காணிக்க 62 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-