அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,: பெரம்பலூர் அருகே 2வதுநாளும் ரூ.1லட்சம் பறிமுதல். ஆத்தூர் சாலையில் பறக்கும்படையிடம் சிக்கியது.
தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் மேமாதம் 16ம்தேதி நடைபெற இருப்பதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி வாகனங்களில் செல்வோர், ரூ50ஆயிரத்திற்கு மேலாகப் பணத்தையோ, நகைகளை யோ உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரிவின் மூலமாக தனித்தனியாக பறக்கும்படை அமைக்கப்பட்டு வாகனத்தணிக்கை நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24ம்தேதி பெரம்பலூரிலிருந்து ஆத்தூர்செல்லும் சாலையில், வேப்பந்தட்டையிலிருந்து அன்னமங்கலம் பிரிவுரோடு இடையே வேளாண் அலுவலரான பறக்கும்படை அதிகாரி நாகராஜன் தலைமையில், காவலர்கள் அனிதா, ரமேஷ், மகாலட்சுமி ஆகியோர் கொண்ட பறக்கும்படையினர் நடத்திய வாகனத் தணிக்கையில் உரியஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ1,62,500 ரொக்கம் பறிமுதல்செய்து, வேப்பந்தட்டை தாசில்தார்மூலம், பெரம்பலூர் சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல் 2வதுநாளான நேற்று ரூ1லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்ப லூர் ஆத்தூர் சாலையில் நேற்று கோனேரிப்பாளையம் பிரிவுரோட்டில் வேளாண்மை அலுவலரான பறக்கும்படை அதிகாரி நாகராஜன் தலைமையில் வாகனத்தணிக்கை நடத்தப்பட்டது. அப்போது, வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூரில் இருந்து திருச்சி நோக்கிச்சென்ற காரினை வழிமறித்து சோதனை நடத்தப்பட்டது.அதில், சர்மிளா பானு என்பவர் வைத்திருந்த ரூ1லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதற்கான ஆவணங்கள் காண்பிக்காததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் பெரம்பலூர் தாசில்தார் மூலமாக, அருகிலுள்ள பெரம்பலூர் சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று பெரம்பலூர் துறையூர் சாலையில் தோட்டக்கலைத்துறை அலுவலரான விஜயகாண்டீபன் தலைமையில் பறக்கும்படையினர் நடத்திய வாகனத் தணிக்கையில், நாமக்கல் மாவட்டத்திலிருந்து பெரம்பலூருக்கு கோழிமுட்டைகளை இறக்கிவிட்டுச் சென்றுகொண்டிருந்த லாரியைமறித்து சோதனையிடப்பட்டது. அப்போது சுருக்குப் பை யில் வைத்திருந்த ரூ1.20லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு கோழிமுட்டைகள் விற்கப்பட்ட ரசீதுகள் காண்பிக்கப்பட்டதால் அரைமணி நேரத்திற்குப் பிறகு அவை லாரி டிரைவரிடமே ஒப்படைக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-