அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூரில், கல்லால் அடித்து தந்தையை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

முறுக்கு வியாபாரம்

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன்(வயது 48). வெல்டிங் தொழிலாளியான இவர் கடந்த பல ஆண்டுகளாக பெரம்பலூர் இந்திரா நகரில் வசித்து வந்தார். தற்போது இவர் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி முருகமணி(40), 2-வது மனைவி சரோஜா (38).

முதல் மனைவியின் மகன் சிவா என்கிற காளை(25). இவர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். தங்க பாண்டியன் 2-வது மனைவியான சரோஜா மற்றும் அவரது குடும்பத்தாரிடம் அதிக ஈடுபாட்டுடன் இருந்தார். முதல் மனைவி முருகமணி மற்றும் குடும்பத்தினரை தங்கபாண்டியன் கண்டு கொள்வதில்லை என்று தெரிகிறது.

கல்லால் அடித்துக் கொலை

மேலும் தங்கபாண்டியன் சிலரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் கடன் தொகையை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இது தங்கபாண்டியனின் மகன் சிவாவிற்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் இரவு சிவா குடிபோதையில் சரோஜாவிடம் சென்று தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் சிவா தனது தந்தையை அழைத்துக்கொண்டு ஆத்தூர் சாலைக்கு சென்றார். அங்கு இருவரும் மதுகுடித்தனர். பின்னர் அங்குள்ள மயானத்திற்கு தந்தையை அழைத்து சென்ற சிவா, தங்கபாண்டியனை தரையில் பதிக்கும் கல்லால்(பேவர் பிளாக் கல்) அடித் துக் கொலை செய்தார். பின்பு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கைது

நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள் தங்கபாண்டியன் பிணமாக கிடந்ததை பார்த்து பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-