அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 கோப்புப்படம்.

 


 


பெரம்பலூர் அருகே தாய் திட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாம்பசிவம் மகள் தனலட்சுமி (17). இவர், அந்தக் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி அவரது தாய் விஜயா திட்டியால் மனமுடைந்த தனலட்சுமி விஷம் குடித்தார். இதையடுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனலட்சுமி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து சாம்பசிவம் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-