அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூரில் ரூ.1 கோடி மதிப்பில் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் கட்டுமானப்பணி கள் தீவிரமாக நடந்து வருகிறது.

விளையாட்டு மைதானம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உருளை சறுக்கு (ரோலர் ஸ்கேட்டிங்) விளையாட்டு மைதானம் அமைக்க மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்கா அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக கடந்த 9.3.2013 அன்று பூமிபூஜை போடப்பட்டது. இதற்கான திட்ட மதிப்பீடான ரூ.1 கோடியில் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தின் சார்பாக ரூ.5 லட்சமும், தமிழக அரசின் தன்னிறைவுத்திட்டத்தின் கீழ் அரசின் பங்களிப்பாக ரூ.10 லட்சமும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கிய நிதி ரூ. 25 லட்சம் என மொத்தம் ரூ.45 லட்சம் செலவில் முதல்கட்ட கட்டுமான பணிகள் நடந்தது.

2-வது கட்டப்பணி

இந்த நிலையில் ரோலர் ஸ்கேட்டிங் கட்டுமானப்பணிக்கு கூடுதலாக சுமார் ரூ.56 லட்சம் தேவைப்பட்டதால், கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதற்கிடையில் ஸ்கேட்டிங் தளம் கட்டுமான பணியை விரைந்து முடிக்கவும், வீரர்களின் பயன்பாட்டிற்கு விடுவதற்காகவும், சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் மூலம் ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தரைதளம் அமைக்கும் 2-வது கட்டப்பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. பொதுப்பணித்துறை கட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவினர் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏப்ரல் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் நிறைவடையும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-