அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உரிய ஆவணங்களின்றி திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் புறவழிச் சாலையில் கோனேரிப்பாளையம் என்ற இடத்தில் வேளாண்மை அலுவலர் நாகராஜன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே சென்ற காரை வழிமறித்தபோது, அந்த கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது.

இதனால் சந்தேகமடைந்த அலுவலர்கள் காரை துரத்தி பிடித்து சோதனையிட்டதில், ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்து 500 இருந்ததும், அதற்கான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள மும்முடி கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சிவக்குமார் (31) என்பவரிடம் விசாரித்ததில், பணம் திருச்சிக்கு கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில், தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான 151 அரிசி மூட்டைகள், ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள 288 மதுபாட்டில்கள், ரூ. 2 லட்சத்து 95 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-