அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், : பெரம்பலூர் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து ஐடி கம்பெனி ஊழியர்கள் உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு நேற்று முன் தினம் இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூரைசேர்ந்த பாஸ்கரன்(40) பஸ்சை ஓட்டினார். இதில் 36 பயணிகள் இருந்தனர்.நேற்று அதிகாலை பெரம்பலூர் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 ரோடு என்ற இடத்தில் அதிவேகத்தில் வந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைகுலைந்து சாலை தடுப்பில் ஏறிய பஸ், மின் கம்பங்களை உடைத்து கொண்டு சாலையின் எதிர்புறம் பாய்ந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது.

பஸ்சில் பயணம் செய்த ஐடி கம்பெனி ஊழியர்கள் பொள்ளாச்சியை சேர்ந்த தேவகி தேவி, உடுமலைப்பேட்டையை சேர்ந்த அருண், விருதுநகர் கலைவாணி, திருச்சி இந்துமதி உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாரும், பெரம்பலூர் போலீசாரும் வந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்துக்குள்ளான பஸ் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து டிரைவர் பாஸ்கரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-