அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள், கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் குடிநீர் கேன்களில் ஒட்டும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி தலைமையில் நடந்தது.

துண்டு பிரசுரங்கள் ஒட்டும் நிகழ்ச்சி

வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல் 2016-ஐ முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த தேர்தல்களில் குறைவாக வாக்குப்பதிவு செய்யப்பட்ட பகுதிகளில் கூடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. கல்லூரி மாணவ, மாணவிகளை கொண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலங்களும், செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த வீடியோ படக்காட்சிகளும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பஸ்கள் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்ச்சி நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி தலைமையில் நடைபெற்றது.

பஸ்கள்-ஆட்டோக்களில்...

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், வாக்காளர்கள் தங்களது வாக்குகளை விலைக்கு விற்கக்கூடாது, வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, வாக்களிப்பது பொறுப்புள்ள குடிமகனின் கடைமை, தேர்தல் நாள் மே 16-ந் தேதி, 100 சதவீதம் வாக்களிக்கத் தயாராவோம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பெரம்பலூர் மாவட்ட புதிய பஸ்நிலையத்தில் உள்ள பஸ்களிலும், ஆட்டோக்களிலும், அனைத்து வீடுகளுக்கும் செல்லும் பொருளாக உள்ள கியாஸ் சிலிண்டர்களிலும் மற்றும் தண்ணீர் கேன்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களான பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் பேபி, மாவட்ட வழங்கல் அலுவலர் கள்ளபிரான் ஆகியோர் ஒட்டினர். மேலும் பஸ் நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்களிடம் வழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்கள்.

அதிகாரிகள்

இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துகழக கோட்ட மேலாளர் ஜீலியஸ் அற்புதராயன், கிளை மேலாளர் ராஜா, வட்டாரப்போக்குவரத்து அலுவலர் அறிவழகன், நகராட்சி ஆணையர் முரளி, வட்டாட்சியர் தமிழரசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-