அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 

இதெல்லாம் கட்டுக்கதை இது எல்லாம் யாரோ கொலுத்தி போட்டது என நினைக்காமல் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. தகவல் பரிமாற்றத்தில் துவங்கி இன்று பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் தொழில்நுட்பங்களில் அதிகளவு பங்கு வகிப்பது ரேடியோ சிக்னல்கள் எனலாம். பொதுவாக ரேடியோ, தொலைகாட்சி, மைக்ரோ வேவ், செல்போன் மற்றும் வை-பை கருவிகளில் இருந்து அதிகப்படியான ரேடியோ சிக்னல்கள் வெளிப்படுகின்றன. இன்று இவை அனைத்தும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட நிலையில் இவைகளை சற்றே ஒதுக்கி வைப்பது குழந்தைகளுக்கு ஏற்படும் தீமையை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வை-பை: உலகமெங்கும் ஆஹா ஓஹோ என பேசப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வரும் தொழில்நுட்பமாக வை-பை இருக்கின்றது.

பிரபலம்: துவக்கத்தில் கொஞ்சம் பேர் மட்டும் அறிந்திருந்த வை-பை தொழில்நுட்பமானது சமீப காலங்களில் வேகமாக வளர்ந்து வருகின்றது.

ஆபத்து: அதீத வளர்ச்சி ஆபத்தில் முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது சமீபத்திய ஆய்வு முடிவுகள்.

பாதிப்பு: வை-பை ரவுட்டர்கள் குழந்தைகளை எந்தளவு பாதிக்கின்றது என்பது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வல்லுநர்கள்: சமீபத்திய ஆய்வு மற்றும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட வல்லுநர்கள் மைக்ரோவேவ் கதிர்கள் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.

அறிவுரை: ஆய்வு முடிவுகளை தொடர்ந்து பாதிப்பினை முடிந்த வரை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பன குறித்தும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

முதியோர்: வயது வந்தோரை விட குழந்தைகள் அதிகப்படியான மைக்ரோவேவ் கதிர்களை உறிஞ்சுகின்றனர்.

கரு: குழந்தைகளை விட தாய் வயிற்றில் இருக்கும் சிசுக்களுக்கு பாதிப்பு அதிகம் என்பதால் கருவுற்ற தாய்மார்கள் மைக்ரோவேவ் கதிர்களில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்.

பெண்கள்: மேலும் பெண்கள் தங்களது கைபேசிகளை உடல் அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

கையேடு: இதோடு செல்போன் கையேடுகளில் அதிகமான பயன்பாடு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளதை அனைவரும் கவனிக்க வேண்டும். பாதிப்பு: இன்று அனைவரும் முக்கியத்துவம் அளித்து வரும் கருவிகளை தவிர்க்க முடியாது என்றாலும், அதிக பயன்பாடு ஆபத்தாகும் என்பதே பல்வேறு ஆய்வுகளும் தெரிவிக்கின்றன

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-