அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
“ச்சீ... ச்சீ செல்லப்பா...” - நிச்சயம் நீங்கள் இந்த வாசகத்தைக் கடந்து வந்திருப்பீர்கள். திறந்த வழியில் மலம், ஜலம் கழிக்கும் மக்களை கிண்டல் செய்து அரசு வெளியிட்ட விளம்பர வாசகம் இது.

'கண்டிப்பாக இயற்கையின் அழைப்பை கழிப்பறைகளில்தான் கழிக்க வேண்டும்; திறந்த வெளியில் சென்றால் நோய் தொற்று ஏற்படும்' என தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான சுவர்களில் அரசு விளம்பரம் செய்தது. ஆனால், அரசு சாமானியர்களை கிண்டல் செய்வதற்கு முன், அரசு அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கிறதா....?
இந்தப் பிரபலமான கதையை நீங்கள் படித்திருப்பீர்கள். ஒரு நாள் விஜயநகர அரண்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள். விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு "உண்பதில்தான் என்ன சுகம்” என்றார். இதைக் கேட்ட தெனாலிராமன், "உண்பதை விட, உண்டதைக் கழிப்பதில்தான் தனிச் சுகம் இருக்கிறது" என்றார் . ராஜகுருவோ சற்று முறைப்பாக "ராஜாங்க விருந்தைப் பழிக்காதே ராமா! உண்பதில்தான் சுகம்" என்றார். தெனாலிராமனோ "கொண்டதை விட கழிப்பதில் தனி சுகம் இருக்கிறது என்பதை நான் ஒரு நாளைக்கு உங்களுக்கு உணர்த்துகிறேன்" என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

ராஜகுரு ஒரு நாள் ஒரு தனியறையில் இருந்த சமயம் பார்த்து வெளியே பூட்டி விட்டார் தெனாலி ராமன். சில மணி நேரங்கள் கழிந்த பிறகு உள்ளேயிருந்த குருவுக்கு மலம் கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. கதவு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அவர் பல முறை தட்டினார். பலனில்லை. அவசரத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார். அவரை நன்றாக தவிக்க விட்டு, கொஞ்ச நேரம் கழித்து ராமன் கதவைத் திறந்தான். அவர் வேகமாக வெளியே வந்து கழிவறை நோக்கி ஓடினார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜகுரு தெனாலிராமனைப் பார்த்து மூச்சு வாங்கச் சொன்னார். "அப்பாடா! ராமா! கழிப்பதுதான் தனிசுகம்தான்...ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.ஆம். நாம் உண்ணாமல் கூட சில நாட்கள் இருந்துவிடலாம். ஆனால், உண்டதை கழிக்காமல் நிச்சயம் இருக்க முடியாது. அது சென்னை பெருமழையில் சிக்கியவர்களுக்கு நன்கு தெரியும்.

விமான நிலையம், துறைமுகம், மெட்ரோ ரயில் என எல்லாம் உள்ள சென்னையில், போதுமான பொது கழிப்பிடங்கள் இருக்கிறதா... ? அதுவும் சென்னை கிண்டியில் இருந்து தேவி தியேட்டர் வரை வரும் ஒரு பெண், தன் இயற்கை உபாதையைத் தணிக்க இந்த மாநகரில் வசதி, வாய்ப்புகள் இருக்கிறதா..? ’இங்கே லேடீஸ் பப்ளிக் டாய்லட் எங்கே இருக்கு?’ என்று ஒரு பெண் கேட்டால், அதற்கு நம் மக்கள் தரும் ரியாக்‌ஷன் என்ன? இறுதியில் அந்தப் பெண்ணால், எப்படித்தான் தன் உபாதையை தணிக்க முடிகிறது? இதற்கு எதற்கு அரசாங்கமும் சமூக அமைப்புகளும்..!

இந்த வீடியோவைப் பாருங்கள்... உங்களுக்கே தெரியும்!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-