அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...





ஸ்மார்ட் போன்களில் இருந்து எமது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு குறும் செய்தி அனுப்ப பெரும்பாலும் நாம் WhatsApp-ஐ பயன்படுத்துகிறோம்.
நம் அனைவருக்குமே தெரியும் WhatsApp-ன் சிறப்பம்சங்கள். தமது பயனர்களுக்காக WhatsApp ஆனது பல்வேறு வசதிகளை தினம் தோறும் தந்து கொண்டு இருக்கிறது.


ஸ்மார்ட் போனை நாம் கையில் எடுத்தால் WhatsApp-ல் நாம் செலவிடும் நேரமே அதிகம் என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இந்த WhatsApp ஆனது நம் அனைவரையும் தன்பக்கம் கவர்ந்திளுத்துள்ளது. அதனால் இன்றைய பதிவில் WhatsApp உடன் சம்மந்தப்பட்ட ஒரு உபாயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.





WhatsApp-ல் எமது அன்புக்குரியவருடன் நாம் Chat செய்யும் போது Smiley-களை அனுப்புவதற்கான வசதியை WhatsApp ஏற்கனவே நமக்கு தந்துள்ளது.
இதற்கு ஒரு படி மேலே சென்று அழகான, வித்தியாசமான Font-களை WhatsApp மூலம் உங்களது நண்பர்களோடு எப்படி பகிர்ந்து கொள்வது என்று இன்றைய பதிவில் பார்ப்போம்.


இந்த வசதிகளை பெற்றுக்கொள்ள Android மற்றும் iPhone-களுக்கான சில துணை செயலிகள் நமக்கு உதவுகிறது.


உங்களிடம் Android ஸ்மார்ட் போன் எனில் இந்த லின்க்கில் சென்று கூல் பொண்ட் செயலியை தரவிறக்கி கொள்ளுங்கள்.


நீங்கள் iPhone பாவனையாளர் எனில் இந்த லின்க்கில் சென்று கூல் பொண்ட் செயலியை தரவிறக்கி கொள்ளுங்கள்.


இந்த செயலியை உபயோகித்து எப்படி உங்களது நண்பர்களுக்கு WhatsApp மூலம் வித்தியாசமான குறும் செய்திகளை அனுப்பது என்று பார்ப்போம்.




நிறுவிய செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் ஆரம்பியுங்கள்.
அதிலே, உங்களுக்கு தேவையான செய்தியை டைப் செய்யுங்கள்.





டைப் செய்யும் போது உங்களுக்கு தேவையான பொண்ட்-களையும் ஸ்டைல்களையும் தெரிவு செய்து கொள்ள முடியும்.













அடுத்து WhatsApp ஐகான்-ஐ கிளிக் செய்தால் உங்களது WhatsApp கணக்கு திறக்கப்படும்.





இப்போது உங்களது அன்புக்குரியவரின் இலக்கத்தை தெரிவு செய்து நீங்கள் அழகாக டைப் செய்த குறும் செய்தியை அனுப்பலாம்.


இந்த வசதியை பயன்படுத்தி உங்களது அன்புக்குரியவர்களுக்கான விசேட செய்திகளை அழகான முறையில் அனுப்பலாம். அதாவது அவர்களுடைய பிறந்தநாள் அன்றோ அல்லது வேறு எதாவது சிறப்பு நாட்களில் இவ்வாறு அழகிய முறையில் செய்திகளை அனுப்பி அவர்களை ஆச்சிரியப்படுத்தலாம்.

techinthamil
நன்றி : தமிழ் கம்பியூட்டர் டாக்டர்
Wajeehu  Sarfan  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-