அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஐக்கிய இராச்சியத்தில் முஸ்லிம்களின் சனத்தொகை 3 மில்லியனைத் தாண்டியுள்ளது.


தலை நகர் லண்டனில் பல பகுதிகளில் 50 வீதம் முஸ்லிம்களே வாழும் நிலை காணப்படும் அதேவேளை இன்னும் 10 வருடங்களில் பெரும்பாலான பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள் எனவும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தற்போதைய கணிப்பின் படி இங்கிலாந்தில் 20ல் ஒருவர் முஸ்லிமாக இருக்கும் அதேவேளை மொத்த முஸ்லிம்களின் தொகை 3,114,992 ஆகும். எனினும் இதில் 50 வீதமானோர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசல்கள், சமய நடவடிக்கைகள் ஐக்கிய இராச்சியத்தில் சுதந்திரமாக மேற்கொள்ளப்படும் அதேவேளை இலங்கையில் பொது பல சேனா போன்ற முஸ்லிம் எதிர்ப்பு சக்திகளும் ஐங்கிய இராச்சியத்தில் இயங்கி வருவதோடு அவ்வப்போது முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்குள் நுழைந்து முறுகலை உருவாக்குவது, பள்ளிவாசல்களுக்குள் காலணிகளுடன் நுழைவது போன்ற காரியங்களை செய்து வருகிறார்கள்.இதேவேளை எதிர்வரும் ஞாயிறு, பள்ளிவாசல்களுக்குள் வந்து பார்வையிடவும், அறிந்து கொள்ளவும் மாற்று மதத்தவர்களுக்கும் வகையிலான நிகழ்வுகள் ஏற்பாடி வருகின்றமையும் அண்மையில் இதே போன்று பிரான்சிலும் ஒரு நிகழ்வு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


இதேபோன்று அனைத்து மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்கள், பழக்க வேறுபாடுகள் கொண்டபர்கள் கூட வித்தியாசங்கள் துறந்து ஒரே பள்ளிவாசலில், ஒரு வரிசையில் நின்றே தமது தொழுகைகளில் ஈடுபடுவதும் சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-