அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
டெல்லி: இந்தியாவில் தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கவும் அதில் 3-ல் 2 பங்கை இந்தியா இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய எண்ணெய் நிறுவனமான "அட்னாக்" ஒப்புதல் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் 50 நெடுஞ்சாலைத் திட்டங்களில் முதலீடு செய்யவும் அமீரகம் விருப்பம் தெரிவித்துள்ளது. 


அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீது அல் நக்யான் 3 நாட்கள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். இந்தியாவுக்கு முதன் முறையாக வருகை தந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார். 

UAE to give India free oil and to invest in National Highway அபுதாபி இளவரசரின் இந்த பயணத்தில் இருதரப்பு தொழில் முதலீடுகள், ஐஎஸ் பயங்கரவாதம் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இதன் ஒருபகுதியாக அமீரகத்தின் தேசிய எண்ணெ நிறுவனமான அட்னாக் (அபுதாபி நேஷனல் ஆயில் கார்ப்பரேஷன்), இந்தியாவில் தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்கவும் அதில் 3-ல் 2 பங்கை இந்தியா அவசரகாலத்துக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

  இந்தியாவைப் பொறுத்தவரையில் 79% அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதை சேமித்து வைக்கப்பதற்காக பாதாள சேமிப்பு கிடங்குகள் ஆந்திராவின் விசாகப்பட்டினம், கர்நாடகாவின் மங்களூர், படூரில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 53 லட்சம் டன் கச்சா எண்ணெய் சேமிக்க முடியும். இதில் மங்களூர் சேமிப்பு கிடங்கில் 15 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை தன்னுடைய வர்த்தக பயன்பாட்டுக்காக சேமித்து வைக்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வைந்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அப்படி சேமித்து வைக்கும் கச்சா எண்ணெய்யை இந்தியா அவசர தேவைகளுக்கு 3-ல் 2 பங்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் அமீரக எண்ணெய் நிறுவனமான அட்னாக் ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.

 இதேபோல் இந்தியாவின் 50 நெடுஞ்சாலைத் திட்டங்களில் முதலீடு செய்யவும் அமீரகம் விருப்பம் தெரிவித்துள்ளது. 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-