அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
நேற்று ஜித்தாவில் ISF சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது இதற்கு சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் தெஹ்லான் பக்கவி அவர்கள் பங்கேற்றார்கள் நிகழ்ச்சி முடிவில் பொதுமக்களுக்கான கேள்விகளும் ஒதுக்கப்பட்டன....

ம.ம.க வை சார்ந்த முகைதீன் என்பவரின் கேள்வி : தற்போது தமிழகத்தில் அரசியல் பரபரப்பாக பேசப்படுகிறது.இதில் முஸ்லிம்கள் இஸ்லாமிய கட்சிகள் ம.ம.க,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகள் ஏன் ஒரே அணியில் நின்று தேர்தல் களத்தை சந்திக்க கூடாது.? அல்லது மூன்று பேரும் தமிழகத்தில் இருக்க கூடிய பெரிய கட்சிகளிடம் ஏன் கூட்டனி வைக்க கூடாது? இதில் உங்கள் நிலைப்பாடு என்ன ? ஒற்றுமையாக உங்கள் பங்கு என்ன ?


மௌலவி தெஹ்லான் பாக்கவி அவர்களின் பதில் : இந்த கேள்வி ஒரு நடுநிலையாளரிடமிருந்தும்,பொதுமக்களிடமிருந்தும் இருந்து வந்தால் அழகாக இருந்திருக்கும் ? ஆனால் நீங்கள் ஒரு கட்சியில் உறுப்பினராக இருக்கின்றீர்கள் இந்த கேள்வியை நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சி தலைமையிடம் கேட்டதுண்டா....? சில மாதங்களுக்கு முன்பாக திருச்சி ஜமால் முஹம்மத் காலேஜில் சமூகத்தை சார்ந்த சில முக்கிய பிரமுகர்களால் சமூக ஒற்றுமைக்காகவும் அரசியலில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும் என்பதிற்காக அந்த முக்கிய பிரமுர்கள் எங்களுக்கு அழைப்பு கொடுத்தனர் அதில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் முகைதீன்,ம.ம.க வின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்,எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் ஆகிய நானும் இருந்தோம்.அந்த முக்கிய பிரமுர்கள் எங்களிடம் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன் நிறுத்தி எங்களிடம் பேசு வார்த்தை நடத்தினார்கள் நான் அங்கு கூறியது நிச்சயமாக வர வேரவேற்கின்றோம் அப்படி ஒரு நிலை வந்தால் நிச்சயமாக எஸ்.டி.பி.ஐ ஒற்றுமைக்கான படியில் முதல் ஆளாக இருக்கும் என வாக்குறுதியும் அளித்தேன்.அந்த நிகழ்ச்சிக்கு பிறகு 15 நாட்களுக்கு பிறகு அதில் ஒரு கட்சி நாங்கள் தி.மு.க வின் பக்கம் கூட்டனியாகவும் இன்னொரு கட்சி அ.தி.மு.க வு க்கு ஆதரவாகவும் கூறிவிட்டனர்.ஆனால் அதில் எஸ்.டி.பி.ஐ யாருடன் கூட்டனி என கூறவில்லை.அந்த கூட்டத்தில் மட்டுமல்ல எஸ்.டி.பி.ஐ நடத்தும் அனைத்து கூட்டங்களிலும் நான் ஒற்றுமையை பற்றி கூறியிருக்கிறேன்.ஒற்றுமையின் முதல் படியாக SDPI இருக்கும் என வாக்குறுதியும் அளித்து வருக்கின்றோம்.இங்கும் கூறுகின்றேன் அப்படி ஒன்று ஏற்படுமானால் எஸ்.டி.பி.ஐ நிச்சயமாக முதல் படியாக இருக்கும்....

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-