
வி.களத்தூர் சுன்னத் ஜமாஅத் மாவட்ட அளவில் நடத்தும் இஸ்லாமிய மாணவர்களுக்கான IAS, IPS மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கான விளக்க கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
வி.களத்தூர் ஜாமியா நிக்காஹ் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் சென்னை இல்மி ஐ ஏ எஸ் அகாடமி தலைவர் சம்சுதீன் காஸிமி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகள் மற்றும் TNPSC போன்ற அரசு வேலை வாய்ப்பு தேர்வுகளை எவ்வாறு அணுகுவது போன்ற முக்கிய விளக்க உரைகள் நடைபெற உள்ளது. ஆகவே மாவட்ட அளவிலான இஸ்லாமிய மாணவர்கள் கலந்துக்கொண்டு பயனடையுமாறு வி.களத்தூர் சுன்னத் ஜமாஅத் அழைக்கிறது.
மேலும் இந்நிகழ்ச்சி முழுவதையும் இன்ஷா அல்லாஹ் சகோதர வலைத்தளமான கல்லாறு.காம் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய படுகிறது . வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வகிக்கும் நமதூர் மக்கள் அனைவரும் காணத்தவறாதீர்கள்.

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.