அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இஸ்தான்புல், பிப்.14

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக நேட்டோ உறுப்பினரான துருக்கிக்கு சவூதி அரேபியா போர் விமானங்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த தகவலை துருக்கியின் வெளியுறவுத்துறை மந்திரி மெவ்லத் காவுசோக்ளூ தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக சவூதி அரேபியா சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான வான்வெளி தாக்குதல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு அமெரிக்காவும் பாராட்டு தெரிவித்துள்ளது. எனினும், சிரியாவிற்குள் அமெரிக்கா தனது ராணுவத்தின் தரைப்படையை களமிறக்க மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால், சவூதி அரேபியா ராணுவ தரைப்படையை துருக்கியுடன் இணைந்து களமிறக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் 4 மாதங்களாக ரஷ்யா நடத்தி வரும் வான்வெளி தாக்குதல்கள் அதிபர் ஆசாத்தின் படைகள் மீண்டும் கைப்பற்றப்பட்ட நகரங்களை ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து மீட்க பக்கபலமாக அமைந்தது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-