அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

புதுடெல்லி,


வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், வெளிநாட்டு பணம் 5 ஆயிரம் டாலருக்கு மேல் கொண்டு வந்தாலோ, இந்திய பணம் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வந்தாலோ, பண பிரகடன படிவத்தில் அந்த விவரத்தை தெரியப்படுத்த வேண்டும். மேலும், அவர்களது பணத்தின் அன்னிய செலாவணி மதிப்பு, 10 ஆயிரம் டாலருக்கு மேல் இருந்தால், சுங்க விதிகளின்படி, மற்றொரு படிவத்தையும் நிரப்பித்தர வேண்டும்.


இந்நிலையில், இந்தியாவுக்கு அடிக்கடி பெரிய அளவில் வெளிநாட்டு பணத்தை கொண்டு வரும் பயணிகளை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவர மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொருளாதார நுண்ணறிவு பிரிவு முடிவு செய்துள்ளது.


நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், பயணிகள் நிரப்பிக்கொடுத்த சுமார் 33 ஆயிரம் படிவங்களை அப்பிரிவு ஆய்வு செய்து வருகிறது. அவற்றில், அடிக்கடி அதிக பணம் கொண்டு வரும் பயணிகளை அடையாளம் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளிடம் தெரிவித்து வருகிறது. கருப்பு பணம் கொண்டு வருவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-