அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூரில் நகராட்சி நிர்வாகமே கடைகள் கட்டுவதற்காக புதிய பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து வருகிறது. இதனால் நிறுத்த இடமின்றி தவிக்கும் அரசுப் பேருந்துகள்.பெரம்பலூர்,: நகராட்சியின் ஆக்கிரமிப்பால் புதிய பேருந்து நிலையத்தில் இடமின்றித் அரசுப் பேருந்துகள் தவித்து வருகின்றன. பெரம்பலூர் நகரம், திருச்சி சென்னை தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 3 ரோடு, 4 ரோடு வழியாக சென்னை, கன்னியாகுமரி, மதுரை செல்லும் விரைவுப் பேருந்துக ளும், சேலம், நாமக்கலில் இருந்து தஞ்சை ,கடலூர் மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளும் இங்குள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான விரைவுப் பேருந்துகள், தொலைதூரப் பேருந்துகள் புதியப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. பல்லாயிரக் கணக்கான பயணிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்தகைய பரபரப்பான புதிய பேருந்து நிலை யத்திற்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகளை முழுமையாகச் செய்து கொடுக்காத பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம், புதிய பேருந்து நிலையத்தைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அதிமுக அரசு பதவியேற்றது முதலே இந்தநகராட்சி பயணிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடத் தொடங்கி விட்டது. இதன் முதல் அஸ்திரமாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து பெரம்பலூர் நகருக்குள் வரும் பயணிகளை பார்களுடன் கூடிய டாஸ்மாக் கடைகளால் வரவேற்கிறது. இங்கு பேருந்துகள் நுழையுமிடம், உட்புறம், பேருந்துகள் வெளியேறுமிடம் என முக்கிய இடங்களைக் குறிவைத்து டாஸ்மாக் கடைகளை நடத்த அனுமதித்துள்ளது. மேலும் பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் இருந்த பயணிகளுக்கான நிழற்குடை சிலமாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. தென்புறமுள்ள பயணியர் நிழற்குடை இன்றோ, நாளையோ இடியும் நிலையில் உள்ளது. பயணிகள் நாற்காலிகளும் பெயர்ந்து பேரீச்சம் பழத்திற்கு போடத் இயலாத நிலையில் உள்ளது. சுகாதாரமற்ற கழிப்பறையைப் பயன்படுத்த அஞ்சி பயணிகள் சைக்கிள் ஸ்டாண்ட் அருகிலேயே அசுத்தம் செய்து வருகின்றனர். பயணிகளை நம்பி கடைகளைக் சாரை சாரையாகக் கட்டி, வருமானம் பார்க்கும் நகராட்சி நிர்வாகத்தால் பேருந்துகள் நிறுத்த இடமின்றித் தவித்துவருவது வேதனையளிக்கும்படி உள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் சென்னை, மதுரை, திருச்சி,வேலூர், விழுப்புரம், கடலூர் விரைவுப் பேருந்துகள் உள்ளே நுழைந்தால் நிறுத்த வழியில்லாமல் ஆக்கிரமித்து, கடைகளைக் கட்டும் வேலையில் நகராட்சி நிர்வாகம் மும்முரம் காட்டி வருகிறது. இதனால் சைக்கிள் ஸ்டாண்ட் வரை விரைவுப் பேருந்துகள் நிறுத்த வேண்டியதிருக்கிறது. க்ஷஇந்நிலையில் தற்போது தென்புறத்தில் உள்ள நிழற் குடையையும் இடித்துவிட்டு கடைக ளைக் கட்டத் திட்டமிட்டுள்ள நகராட்சி நிர்வாகத்தால் விரைவுப் பேருந்துகள் இடவசதி யின்றி உள்ளேவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்கு வசதிகள் ஏதும் செய்து தராமல் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகமே ஆக்கிரமிப்பது வருந்தத்தக்கது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-