அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 
 

மாட்ரிட், பிப்.6-

சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் இருந்து ரியாத் நகருக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது, மாட்ரிட் விமான நிலையத்தை டெலிபோனில் தொடர்புகொண்டு பேசிய மர்ம மனிதன், சவுதி அரேபியா விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் தெரிவித்தான். இதனால் விமான நிலையத்தில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

உடனே விமானத்தில் இருந்த பயணிகள் அவசரமாக இறக்கபட்டனர். மாட்ரிட் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் வெடிகுண்டு உள்ளதா என அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே, இது வெறும் புரளி என தெரியவந்தது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-