அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...[AD] துபாய், பிப். 10-

ஐக்கிய அரபு எமிரேட்ட்டில் மகிழ்ச்சி மற்றும் சகிப்புத்தன்மைக்கு தனித்தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்டில் அரசின் அமைச்சகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக அரசின் நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களுக்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் கொடுக்க மகிழ்ச்சி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டோம் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சகிப்புத்தன்மையை ஐக்கிய அரபு எமிரேட் சமூகத்தின் ஒரு அடிப்படை விழுமியமாக மேம்படுத்த சகிப்புத்தன்மை அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அறிவித்துள்ளார்.

ஆனால் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்காத ஐக்கிய அரபு எமிரேட்டில் மகிழ்ச்சி மற்றும் சகிப்புத்தன்மைக்கு என்று தனித்தனியாக அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதில், தங்களுக்கு சுத்தமாக மகிழ்ச்சி இல்லை என்று சமூக ஆர்வளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-