அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 
விழுப்புரம்,

விழுப்புரம் அருகே தானாக உடலில் தீப்பற்றி எரிந்த குழந்தை திடீரென இறந்தது.

தீப்பற்றி எரிந்த குழந்தை

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே நெடிமோழியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது 28), தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி(24). இவர்களுக்கு ராகுல்(3), ஜெயராமசந்திரன் (1½) என 2 மகன்கள் இருந்தனர்.

குழந்தை ராகுல், பிறந்த சில தினங்களிலேயே அவனது உடலில் தானாக தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அவனது உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 6 மாத சிகிச்சைக்கு பின் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து டாக்டர்கள் கூறும் போது, சிறுவனின் உடலில் இருந்து சுரக்கும் நீரினால் இது போன்று ஏற்பட்டிருக்கும் என்று கூறுகின்றனர்.

இந்த நிலையில், ராகுலின் தம்பி ஜெயராமசந்திரனின் உடலிலும் தானாக தீப்பற்றியது. இதையடுத்து, அவனுக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, ராகுலும், ஜெயராமசந்திரனும் உடல் நலமுடன் இருந்தனர்.

திடீர் சாவு

இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி குழந்தை ஜெயராமசந்திரனுக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. உடனே குழந்தையை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. பின்னர், ரெட்டணையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

குழந்தையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்க டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் குழந்தை ஜெயராமசந்திரன் 16-ந்தேதி நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்தான்.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-