அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...உமர் பீன் கத்தாப் [ ரழி ] அவர்களின் ஆட்சி
காலத்தில் பாலஸ்தீன் யூதர்களிடம் இருந்து
வெற்றி பெற்று மீண்டும் இஸ்லாமியர் கைவச
ம் வந்து விட்டது அதன் ஜனாதிபதியாக உமர்
அவர்களானார்.

பாலஸ்தீன் வாசிகள் தங்களின் ஆட்சியாளர்
உமர் அவர்களை பார்க்க ஆசைபட்டு ஆர்வத்
தில் கிளர்ச்சி செய்தனர் இதையறிந்த உமர்
அவர்கள் தனக்கு துனையாக பனியாளர் ஒரு
வரை அழைத்து கொண்டு பாலஸ்தீனம் புறப்
பட்டு சென்றார்.

பயணத்தின் போது உமர் அவர்கள் ஒரு நிபந்
தனை ஒன்றை விதித்தார் அதாவது ஒரு குறி
ப்பட்ட தூரம் வரை ஒட்டகத்தின் மேல் நான்
அமர்ந்து வருவேன் பின்னர் நீர் அமர்ந்து வரு
ம் இப்படியே மாறி மாறி சூழற்சி முறையில்
பயணிக்க வேண்டும் என்றார் உமர் அவர்கள்.

பல நாட்கள் தொடர்ந்த இந்த பயணம் முடி
வுக்கு வந்து விட்டது ஆம் பாலஸ்தீன் தேச
எல்லையை நெருங்கிவிட்டார்கள். எல்லை
யின் இரு மருங்கிலும் உமரை வரவேற்க்க
பெரும் கூட்டம் திரண்டிருந்தார்கள்.

உமர் அவர்கள் பாலஸ்தீன எல்லைக்குள்
நுழையும் தருவாயில் உமர் அவர்களின்
ஓட்டகத்தில் அமரும் தூரம் முடிந்து விட்டது
உமர் அவர்கள் ஒட்டகத்தை விட்டு இறங்கி
பணியாளரிடம் கொடுத்தார். பணியாளரே
இப்போது எல்லைக்குள் நுழைய இருக்கின்
றோம் நீங்கள் தொடர்ந்து அமருங்கள் எனக்
கூறினார் உமர் அவர்கள்.

அதற்கு பணியாளர் உமர் அவர்களை பார்த்து
அரசே மக்கள் பார்க்கும் போது தாங்கள் ஓட்
டகத்தின் மேல் அமர்வதே சரி அதுவே முறை
யுமாகும் என்றார் அந்த பணியாளர்.

நீர் கூறுவது சரிதான் ஆனால் ஓட்டகத்தில்
அரசனாக அமர்ந்து வருவதை விட வாக்கு
தவறாத இறைவனின் அடிமையாக இருக்க
வே நான் என்றும் ஆசைபடுகிறேன் என்றார்
உமர் பின் கத்தாப் அவர்கள்.

இது உன்னுடைய முறை சரி ஓட்டகத்தின்
மீது அமர்ந்து கொள்ள என்று பணியாளர் ஓட்
டகத்தின் மேல் அமர்ந்திருக்க ஓட்டகத்தை
பிடித்த படியே பாலஸ்தீனுக்குள் நுழைந்தார்
உமர் பின் கத்தாப் அவர்கள்.

ஓட்டகத்தின் மேல் இருக்கும் பனியாளரை
மன்னார் என நினைத்து மக்கள் அனைவரும்
மகிழ்ச்சியில் திகைத்தனர்.

ஓட்டகத்தின் மேல் இருக்கும் பணியாளரை
அரசர் என நினைக்க சில காரணங்கள் இரு
ந்தது அதாவது இதற்கு முன்னர் உமர் அவர்
களை பாலஸ்தீன் மக்கள் கண்டதில்லை
மற்றுமொரு காரணம் தான் ஓட்டத்தில் இரு
க்கும் பணியாளரின் ஆடையில் மூன்று கிளி
ச்சால்கள் ஓட்டகத்தை பிடித்து வந்த உமர்
அவர்களின் ஆடையில் பதினாறு கிளிச்சல்
கள் இருந்தன இத்தனை வைத்து அந்த மக்
கள் பணியாளரை மன்னார் என நினைத்து
விட்டார்கள்.

பணியாளர் ஓட்டகத்தின் மீது உமர் அவர் ந
டந்து வருவதை கண்ட இஸ்லாமிய தளபதி
காலித் பின் வாலித் அவர் சற்டேன உரையில்
இருந்த வளை எடுத்து பணியாளரை வெட்ட
சென்றதற்கு உமர் அவர் வேண்டும் நிறுத்துங்
கள் இது எனக்கும் அவருக்கும் உள்ள ஒரு
ஆகும் என தடுத்து விட்டார்கள்.

இப்படிப்பட்ட ஒரு தலைசிறந்த மன்னருக்கு குடிமக்களாக நாங்கள் இருப்பதற்கு மிகவும்
பெருமையடைகிறோம் என்றார்கள் அந்த
தேசத்து மக்கள்..எல்லா புகழும் அல்லாஹ்
ஒருவனுக்கே..

உமரின் ஆட்சியைத்தான் மகாத்மா காந்தி
யும் விரும்பினார்கள் எனவே அவர் கூறினார்
ஆட்சி என்றால் அது உமரின் ஆட்சி தான்.

Mohamed Hasil

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-