அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.....

.


வி.களத்தூர். பிப் 26.
வி.களத்தூரில் நேற்று மாலை 5:30 மணியளவில் நமது ஊர் பெரம்பலூர் இடையே ஒரு புதிய அரசு பேருந்து அறிமுகப்படுத்தப் பட்டது.

இதை வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் அவர்கள் துவக்கி வைத்தார்.தமிழ் செல்வன் M.L.A. உடன் இருந்தார். இதில் எராளமான அதிமுக நிர்வாகிகளும் ஊர் பொது மக்களும் கலந்து கொண்டனர்  
.
மேலும் வி.களத்தூர் ராயப்ப நகரில் (கிழச்சேரி) புதிதாக கட்டப்பட்ட வி.களத்தூர் தொடக்கப்பள்ளி இதையும் அமைச்சர் வைத்தியலிங்கம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  வி.களத்தூர்க்கு விடப்பட்ட புதிய பேருந்து பெரம்பலூரில் இருந்து வாலிகண்டபுரம்,சின்னாறு ,வி.களத்தூர் வழியாக பசும்பலூர் செல்லும்.
ஆனால் வி.களத்தூர் மக்களுக்கு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி நமது செய்தியாளர் பெரம்பலூர் டிப்போக்கு போன் செய்து தினசரி பெரம்பலூரிலிருந்து இந்த  பேருந்து  நேரம் நேரம் என்ன? மற்றும் வி.களத்தூர்  இருந்து புறப்படும் நேரம் என்ன ?போன்ற கேள்விகளை முன் வைத்தார்.அதற்கு டிப்போ நிர்வாகம் இன்னும் R.T.A . இடம் இருந்து டைம் எங்களுக்கு வர வில்லை வந்தவுடன் முறைப்படி அறிவிக்கப்படும் என கூறினார். 

வி.களத்தூர் வியாபாரிகள் சங்கம் முன்னால் கலெக்டர் தரேஸ் அஹம்மது,மற்றும் தமிழ் செல்வன் MLA ஆகியோரிடம் பெரம்பலூர் -வி.களத்தூர் -கூகையூர் -சின்ன சேலத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர மனு அளிக்கப்பட்டது . அப்போது உடனே அவர்கள் விரைவில் பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தனர்.அது அந்த பேருந்தா? என வி.களத்தூர் வியாபார சங்க நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பினர்.
  
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவசர அவசரமாக இந்த பேருந்து விடப்பட்டது வி.களத்தூர் மக்கள் இடையே பல்வேறு சந்தேகம் ஏற்படுத்தி உள்ளது.இந்த பேருந்து நிரந்தரமாக வருமா? என பொருத்து இருந்து பார்ப்போம்.
எது எப்படியோ வி.களத்தூர் மக்களுக்கு இந்த பேருந்து நிரந்தரமாக வந்தால் என்றென்றும் ஆனந்தமே!!!!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-