அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அ(z)ஸ்ஹான் ஹனீபா ~


மதீனாவில் அமைந்திருக்கும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஒரு மாபெரும் நூல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது , ஏற்கனவே இருந்த நூலகத்துல் இட வசதி , தொழில்நுட்ப வசதிகள் போதாமையின் காரணாமகவே இப் புதிய வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது .
இது தற்பொழுது புதுப் பொலிவுடனும் , உச்ச கட்ட தொழில்நுட்ப வசதிகளும் நிறைந்த ஒரு நூல் நிலையமாக பிரகாசிக்கின்றது .


ஒரு புத்தகம் இரவல் எடுக்க வேண்டுமெனில் அங்குள்ள பதிவு இயந்திரத்தில் எமது பல்கலைக்கழக மாணவ அட்டையின் இலக்கங்களை பதிந்த பிறகு புத்தகத்தை scan செய்ததும் இரவல் பெற்றுக் கொள்ள முடியும் , இவ்விரவலின் காலம் இரண்டு கிழமையையே ஆகும் .


அவ்வாறே ஒரு புத்தகத்தை PDF முறையில் பெற்றுக் கொள்வதற்கு எமக்குத் தேவையான நூலை கொண்டு சென்று அங்கு scan க்கு என்று உள்ள ஒரு இயந்திரத்தில் scan செய்து அவற்றை pen drive இல் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் .


மேலும் அக்காலம் தொட்டுள்ள முன் சென்ற அறிஞர்களின் கேயேடுகளின் மூலப் பிரதிகள் நிறையவே காணப்படுகின்றன .
சிறந்த முறையில் ஒவ்வொரு துறைக்கான நூற்களும் ஒழுங்குபடுத்தப்பட்டு , நேர்த்தியான வகையில் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. மாணவர்கள் மாத்திரமன்றி பொது மக்களும் பயனளிக்கும் வகையில் எல்லோருக்கும் பொதுவாக அமைந்திருப்பது இதன் விஷேட அம்சம் எனலாம் .


மூன்று மாடிகளைக் கொண்ட இந் நூல் நிலையம் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் அமைந்திருப்பதோடு " அல் மக்தபதுல் மர்கஸிய்யா " எனும் புதிய பெயருடன் காட்சியளிக்கின்றது .
சுமார் 25,000 மாணவர்களைக் கொண்ட இப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் வெவ்வேறு பீடங்களில் பிரத்தியேகமான சிறு நூல் நிலையங்களும் அமையப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது .


ஆக இவ்வாறு பல இலட்சக் கணக்கான புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள இந் நூலகத்தின் நோக்கம் அனைவரும் பயன் பெற்று சிறந்த அறிவாளிகளாக பிரதிபலிப்பதே ஆகும் .


அனைவரும் இவ்வாறான நூலகத்திலிருந்து பயனடைந்து சமூகத்திற்கு பிரயோசனம் அளிக்கும் வகையில் செயற்படுவோம் .

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-