அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...  


ஒரு சில நாட்களுக்கு முன் தனீஷ் ஜோசப்
என்ற மலையாளி அன்பர் தெருவில் 80,000 தீனார் கண்டெடுத்ததாகவும் (1.44,00,000 ரூபாய்) அதை அப்படியே இங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் செய்தி வாட்ஸ்-அப், மற்றும் முகநூல் ஊடகங்களில் பரவியது. அந்த மனிதரின் நேர்மையும் விசுவாசத்தையும் அறிந்து எல்லோரும் வியந்தார்கள். பத்திரிக்கைகளில் அவருடைய புகைப்படத்தைப் போட்டு “Man Wins Heart with his honesty” என்ற தலையங்கத்துடன் அவரது சாதனையை அவருடைய புகைப்படத்துடன் விளக்கியிருந்தார்கள். இங்குள்ள ஏராளமான கேரள அமைப்புகள் தனீஷுக்கு விருது அளித்து கெளரவித்தனர்.

அந்த பணத்தை உண்மையிலேயே கண்டெடுத்தது பாவப்பட்ட ஒரு தமிழர். இவர் பெயர் கருப்பையா. ராமநாதபுரம் மாவட்ட்டத்திலுள்ள முள்ளி முனை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடலில் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர். அவர் கண்டெடுத்த கைப்பையில் கட்டுக்கட்டாக பணமும், உரிமையாளரின் பாஸ்போர்ட்டும் இருந்தது. இந்த சம்பவம் நடைபெற்றது கோல்டு சிட்டி அருகிலுள்ள பாம்பே ரெஸ்டாரண்ட்டுக்கு முன்பு.

கைப்பையை எடுத்த இவர் பாம்பே ரெஸ்டாரண்டுக்கு உள்ளே நுழைந்து இந்த கைப்பை இங்கே கிடக்கிறது என்று சொல்ல அங்கே உணவருந்திக் கொண்டிருந்த அத்தனைப்பேரும் இதனை பார்த்திருக்கிறார்கள். அந்த ரெஸ்டாரண்டின் முதலாளி மஹ்மூது காக்கா “இதை உடனே காவல் நிலையத்தில் சென்று ஒப்படைத்து விடுங்கள்” என்று அங்கிருந்த ஹஸன் காக்கா என்பவரின் மகனிடம் சொல்ல அந்த சம்[பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தனீஷ் என்பவரும் காவல் நிலையத்திற்கு துணைக்குச் சென்றிருக்கிறார்.

பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்ததைப் போல அது 80,000 தீனார் தொகையும் அல்ல. 18,000 தீனார் மட்டுமே. அந்த பணத்தை உரியவரான அரபியிடம் ஒப்படைக்கப்பட்டு அவரும் தொகை சரிதான் என்று உறுதிபடுத்தி இருக்கிறார். ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி தனீஷ் என்பவரை ஹீரோவாக்கி விட்டார்கள் பத்திரிக்கை ஊடகங்கள். Gulf Daily News மற்றும் Daily Tribune பத்திரிக்கைகள் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-