அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மும்பை: மருந்து பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எப்.டி.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது.விதிமுறைகளின்படி மருத்துவர்களின் மருந்து சீட்டு இல்லாமல், மருந்தகங்களில் மருந்து பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. ஆனால், ஆன்லைனில் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த எந்தவித சட்ட விதிமுறைகளும் இதுவரை வகுக்கப்படவில்லை. அதனால், ஆன்லைனில் மருந்து பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

மேலும், ஆன்லைனில் சட்டவிரோதமாக மருந்து பொருட்கள் விற்பனை செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி பல மருந்து நிறுவனங்கள், தரமற்ற மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடிய மருந்துகளை விற்பனை செய்வதாகவும், இதனால் பொதுமக்கள் அதிகளவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் உணவு மற்றும் மருந்து கழக (எப்.டி.ஏ.) அதிகாரி மாசல் இது குறித்து கூறும்போது, ''ஆன்லைனில் மருந்து விற்பனையை ஒழுங்குபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை எங்களால் ஆய்வு செய்ய முடியாது. அதனால், பொதுமக்கள் ஆன்லைனில் மருந்து பொருட்கள் வாங்க வேண்டாம்" என்று தெரிவித்து உள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-