அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
 
துபாய்: துபாய் துணை தூதரக அதிகாரி கே.முரளீதரன் அளித்த பேட்டியில் ... அமீரகத்திற்கு இந்தியாவில் இருந்து பலர் வேலை தேடி வருகின்றனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சில இடைதரகர்கள் அவர்களை தவறாக வழிநடத்துகின்றனர். அதிகமாக கமிசனை இவர்கள் பெற்று நிர்ணயிக்கப்பட்ட‌ சம்பளத்தை கூடுதலாக தெரிவித்து ஆசை வார்த்தை கூறி வருகின்றன‌ர். மேலும் சிலர் முறையான பயிற்சி பெறாமல் குறிப்பிட்ட வேலைக்கு போலியான அனுபவ சான்றிதழ்களுடன் அனுப்பி விடுகின்றனர்.இதனால் அமீரகம் வந்த பின் அந்த தொழிலாளர்கள் தேவையற்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையை மாற்றுவதற்கு இந்திய வெளியுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வெளிநாடு இந்திய நலத்துறை திறன்மிகு பயிற்சி மையத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயிற்சி மையம் மூலம் தொழிலாளர்களுக்கு சிறப்புடன் பயிற்சியளிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பு முயற்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உத்தர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அரசு அதிகாரிகள் துபாய் வருகிறார்கள். இந்திய தூதரகத்தில் நாளை மறுநாள் மாலையில் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்திக்கிறார்கள். அப்போது அந்ததந்த நிறுவனங்களுக்கு தேவையான தொழிலாளர்கள் பற்றி விபரங்களை கேட்டறிந்து அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் என்ன பணிகளுக்கு எவ்வளவு சம்பளம் என்பதை அறிந்து அதெற்கேற்ப செயல் திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுவார்கள் இதன் மூலம் அதற்கேற்ப அந்தந்த மாநில தொழிலாளர்கள் தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்கள் வெளிநாடுகள் செல்லும்போது பிரச்சனைகள் ஏற்படாமல் பணிபுரிய முடியும். சம்பளம் குறிப்பிட்ட அளவு இல்லாத பட்சத்தில் மேக் இன் இந்தியா திட்டத்தின் இந்தியாவிலேயே அவர்களுக்கு பணி வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.இதன் மூலம் இந்தியாவில் தொழில் திறமை வாய்ந்த இளைஞர்கள் உருவாகும் நிலை வரும் இருக்கும் என்றார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-