அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உரிய நேரத்துக்கு பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளன. இங்கு, மரவநத்தம், வள்ளியூர், என்.புதூர், வி.களத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் இலவசப் பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளிக்கு செல்லும் வகையில் பெரம்பலூரிலிருந்து பசும்பலூர் வழியாகவும், வேப்பந்தட்டை வழியாகவும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், பள்ளி நேரங்களில் போதிய பேருந்து வசதிகள் இல்லை எனவும், குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுவதில்லை எனவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்து வருகின்றனர். பேருந்து வசதியில்லாததால் பள்ளிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் பேருந்து வசதிக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, மாணவர்களின் நலனை கருதி குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்து இயக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியராக இருந்த தரேஸ் அஹமது போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, உரிய நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், தற்போது பள்ளி விடுவதற்கு முன்னதாக பேருந்துகள் சென்றுவிடுவதால் மரவநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளி எதிரே சாலையோரத்தில் நீண்ட நேரமாக பேருந்துக்காக காத்துக் கிடக்கின்றனர். எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய நேரத்துக்கு பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-