அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் ஓகளூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 30). இவர் துபாயில் உள்ள ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 4-ந் தேதி இரவு தான் வேலை பார்த்த எலக்ட்ரானிக்ஸ் கடை குடோனில் ராஜ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர்கள் திட்டியதால் தான் சாக போவதாக நண்பர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பியிருந்தார். இதுகுறித்த செய்தி தினத்தந்தியில் வெளியிடப்பட்டது. இதையடுத்து இதுகுறித்த தகவல் அறிந்த இந்திய தூதரகம் இறந்து போன ராஜ்குமாரின் உறவினர்களிடமும், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில் இந்திய தூதரகம் எடுத்த நடவடிக்கையின் பேரில் ராஜ்குமார் உடல் துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று மாலை வந்தது. பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான ஒகளூருக்கு ராஜ்குமாரின் உடல் கொண்டு வரப்பட்டது. அப்போது ராஜ்குமாரின் உடலை பார்த்து அவரது சகோதரிகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-