அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
வாஷிங்டன்: வன்முறையை தூண்டும் வார்த்தைகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளது இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனிலா அல்லது அல்லது கிறித்தவர்களின் புனித நூலான பைபிளிலா என்று நடத்தப்பட்ட ஆய்வில் சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, கோபம், அருவருப்பு, வருத்தம், ஆச்சரியம், பயம், கவலை மற்றும் நம்பிக்கை ஆகிய 8 மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகள் இஸ்லாமியர்களின் குர்ஆன் நூலில் அதிகமாக உள்ளதா அல்லது கிறித்தவர்களின் பைபிள் நூலில் உள்ளதா என டாம் ஆண்டர்சன் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் பொறியாளர் ஒரு ஆய்வு மேற்கொண்டார். Bible has more violent content than Quran, reveals text analysis இந்த ஆய்வை விரைவாக மேற்கொள்ள நவீன மின்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 2 நூல்களையும் வெறும் 2 நிமிடங்களில் ஆய்வு செய்து முடித்துள்ளார். இந்த ஆய்வின் முடிவில், 'கொல்லுதல், அழித்தல் உள்ளிட்ட வன்முறைக்கு தூண்டும் வார்த்தைகள் அதிகளவில், அதாவது 5.3 சதவிகிதம் கிறித்துவர்களின் பழைய பைபிளிலும், 2.8 சதவிகித வன்முறை வார்த்தைகள் புதிய பைபிளிலும் அடங்கியுள்ளன. ஆனால், இஸ்லாமியர்களின் புனித நூலில் 2.1 சதவிகித வன்முறை வார்த்தைகள் மட்டுமே அடங்கியுள்ளதாக டாம் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-