அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

நியூயார்க்,

ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதை போன்ற புதிய தொழில்நுட்பம் ஒன்றை அமெரிக்காவில் கூகுள் என்ஜினியர் ஒருவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இதுசம்பந்தமாக, டெக்டைம்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:-

கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் மேக்ஸ் பிரவுன் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து பாத்ரூம் கண்ணாடியில் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை பதிவேற்றி இயக்கியுள்ளார். சாதாரண கண்ணாடியை ஸ்மார்ட் கண்ணாடியாக மாற்ற டூ வே மிரர் என்ற கண்ணாடியை பயன்படுத்தியிருக்கிறார் பிரவுன். அதுதவிர, கன்ட்ரோலர் போர்டு, டிஸ்பிளே பேனல், எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள், அலங்கார பொருட்களை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் கண்ணாடி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த கண்ணாடியில் வானிலை குறித்த அப்டேட்கள், குரல் மூலமாக கூகுள் இணையதளத்தில் தேடும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன. விரைவில், மேலும் பல புதிய வசதிகளை இணைக்கவும் பிரவுன் முடிவு செய்துள்ளார். சில மில்லிமீட்டர்கள் தடிமன் மட்டுமே கொண்ட இந்த ஸ்மார்ட் கண்ணாடி கண்ணை கவரும் விதமாக உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரவுன் தனது கண்ணாடியை டுவிட்டரிலும் வெளியிட்டுள்ளார்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-