அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...கடும் குளிர். இரவுத் தொழுகைக்கு தலைவனாக நின்று தொழ வைக்க ஒலி பெருக்கியை ஆன் செய்ய செல்கிறேன். நண்பர் ஒருவர் மொபைலில் அதனை படமாக எடுத்துக் கொடுத்தார். இது எனது அலுவலகத்துக்கு அருகில் உள்ள சிறிய பள்ளிவாசல்.

எந்த மதரஸாவிலும் சென்று நான் படிக்கவில்லை. சிறிய தவறு ஓதிவதில் நான் செய்தாலும் அது ஒலி வாங்கி மூலமாக அனைவருக்கும் தெரிந்து விடும். இருந்தும் என்னை தலைவனாக நிறுத்துகிறார்கள். என்னை பின் பற்றி எகிப்து, சவுதி, சூடான், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை நாட்டவர் தொழுகின்றனர். எனது கட்டளையை ஏற்று நான் குனிந்தால் குனிகிறார்கள். நான் நிமிர்ந்தால் நிமிர்கிறார்கள். மொழி வெறி பிடித்த இந்த அரபுகளிடம் இது எப்படி சாத்தியமானது?

நபிகள் நாயகம் தனது இறுதிப் பேருரையில் இவ்வாறு கூறுகிறார்....

"மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற அபிசீனிய அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் அவரது சொல்லைக் கேட்டு நடங்கள். அவருக்குக் கீழ்ப்படியுங்கள்!"

(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

மொழி வெறி பிடித்த நிற வெறி பிடித்த அன்றைய அரபு மக்களை இஸ்லாம் தனது அன்பு கட்டளைகளால் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த மாற்றங்கள்தான் இன்று வரை அரபுகள் கூட தொழுகையில் என்னைப் போன்றவர்களை பின் பற்ற வைக்கிறது.

எல்லா புகழும் இறைவனுக்கே!
 Thanks by சுவனப் பிரியன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-