அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், பிப்.26-பெரம்பலூர் அருகே மனைவியுடன் கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடித்து துன்புறுத்தினார்பெரம்பலூரை அடுத்த சிறுகன்பூரை சேர்ந்தவர் சிவசாமி (வயது 64). விவசாயி. இவரது மனைவி தவமணி (55). இவருக்கு சிறுவாச்சூர் அருகே மருதடி காட்டுக்கொட்டகை பகுதியில் வயல் காடு உள்ளது.இவர்களுக்கு அன்பழகன், லட்சுமணன் ஆகிய 2 மகன்களும், ராமசுந்தரி என்ற மகளும் உள்ளனர். லட்சுமணன் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். ராமசுந்தரியை திருமணம் செய்து கொடுத்து விட்டனர். மூத்தமகன் அன்பழகன் மருதடி காட்டுக்கொட்டகை பகுதியில் வயல்காட்டில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். சிவசாமி சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தவமணியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்தார். இதையடுத்து தவமணி,அன்பழகன் வீட்டுக்கு சென்று விட்டார்.கிணற்றில் குதித்தார்நேற்று முன்தினம் இரவு அன்பழகன் தான் வளர்த்து வரும் பசுமாடுகளில் பால் கறந்து எடுத்து கொண்டு சிறுவாச்சூர் பால்சொசைட்டிக்கு சென்று விட்டார். இதனை அறிந்த சிவசாமி, அங்கு சென்று தவமணியிடம் பிரச்சினை செய்துள்ளார். பின்னர் அவரை அருகே வயல்காட்டில் உள்ள கிணற்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.இதையடுத்து தான் அணிந்திருந்த வேட்டியை கழற்றி அதில் ஒருபாதியை தவமணியின் இடுப்பில் கட்டியும், மறுபாதியை தனது இடுப்பிலும் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்தார். சொசைட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்த அன்பழகன் தனது தாய் தவமணியை தேடினார். இதை தொடர்ந்து வயல்காட்டுக்கு சென்று பார்த்தபோது கிணற்று மேட்டில் சிவசாமியின் உடைகள் மற்றும் காலணிகள் இருந்ததை வைத்து இருவரும் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்று பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.பிணமாக மிதந்தனர்இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி பார்த்த போது சிவசாமி தவமணியுடன் இடுப்பில் வேட்டி சுற்றப்பட்ட நிலையில் பிணமாக மிதந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவசாமி, தவமணி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-