அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...




பெரம்பலுார் அருகே 13 மாணவர்களிடம் ஹோமோ செக்ஸில் ஈடுபட்ட தாளாளர் மற்றும் காப்பாளர் ஆகிய இருவரையும் மங்கலமேடு போலீஸார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் (சர்க்கரை ஆலை )எறையூர் கிராமத்தில் விடுதியுடன் கூடிய ஆர்.சி., நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 131 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 90 மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

விடுதியில் தங்கி பயின்ற 13 மாணவர்களிடம் பள்ளியின் தாளாளர் சகாயராஜ்,43, மற்றும் விடுதி வார்டன் அந்தோனிசாமி,24, ஆகிய இருவரும் சேர்ந்து தகாத முறையில் ஹோமோசெக்ஸில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் பெரம்பலுார் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர்.

பெரம்பலுார் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரி மற்றும் போலீஸார் விடுதிக்கு சென்று விடுதிக்கு சென்று விசாரித்தபோது சம்பவம் உண்மை என தெரியவந்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 13 மாணவர்கள் கீழப்புலியூர் அரசு விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறி்த்து மங்கலமேடு போலீஸார் வழக்கு பதிந்து தாளாளர் சகாயராஜ், காப்பாளர் அந்தோனிசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-