அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



 





பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரியின் பெண்  பேராசிரியை  தாயுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர்களுடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விரிவுரையாளர்

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் புறநகர் அரணாரை நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி பாக்கியம்(வயது 52). எல்.ஐ.சி. முகவர். ராஜேந்திரன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இதனால் பாக்கியம் தனது மகன் தினேஷ்பாபு(30), மகள் கிருத்திகா(25), தினேஷ்பாபுவின் மனைவி சந்தியா ஆகியோருடன் வசித்து வந்தார்.

தினேஷ்பாபு பெரம்பலூர் பகுதியில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். கிருத்திகா பெரம்பலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் தினேஷ்பாபு தனது வேலை தொடர்பாக சென்னைக்கு சென்றுவிட்டார். அவருடைய மனைவி சந்தியா, திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.தூக்குப்போட்டு தற்கொலை

இந்நிலையில் நேற்று இரவில் அக்கம், பக்கத்தினர் பாக்கியத்தை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றனர். அப்போது பாக்கியம் படுக்கை அறையிலும், கிருத்திகா குளியல் அறையிலும் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாக்கியம் மற்றும் கிருத்திகாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பாக்கியமும், கிருத்திகாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரணாரை பகுதியில் தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-