அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஐ. எஸ் தீவிரவாதிகளை தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு துன்புறுத்துவது கூடாது என்று புகாரி இமாம் பிரதமர் மோடியை சந்தித்து கூறியுள்ளார்.


பிரதமரை டில்லி தலைமை இமாம் செய்யது அகமது புகாரி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் தீவிரவாத குற்றச்சாட்டின் பெயரில் அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் வேட்டையாடப்படுவதைக் கண்டித்து பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

முஸ்லீம்களை கைது செய்வதில் உண்மை தன்மை இருக்கவேண்டும் என்றும், இதுவரை நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பொய்யான தீவிரவாத குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து புகாரி இமாம் தெரிவித்த கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்காகவும் இந்த அரசு செயல்படாது என்றும் பிரதமர் மோடி புகாரி இமாமிடம் வாக்களித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-