அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அபுதாபியில் 'பாரதி நட்புக்காக' அமைப்பின் சார்பில் ஆண்டுவிழா மற்றும் தமிழர் திருநாள் விழா அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில் 22-01-2016 வெள்ளி மாலை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் சுகி.சிவம் தலைமையில் தமிழகத்தின் பேச்சாளர்கள் பலர் கலந்துக்கொண்ட பட்டிமன்றம் நடந்தேறியது.

மேலும் இவ்விழாவில் சமீபத்தில் சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட இயற்கை பேரழிவிற்கு உதவும் பொருட்டு அமீரகத்திலிருந்து அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு பேருதவி புரிந்த செயல்வீரர்களுக்கு இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தின் தலைவர் ரமேஷ் பணிக்கர், பொதுச்செயலாளர் அப்துல் சலாம் இருவரும் பாராட்டுதலும் கேடயமும் வழங்கினர்.

இவ்விழாவிற்கு பாரதியின் தலைவர் இராமக்கிருஷ்ணன் மற்றும் பொதுச்செயலாளர் ஹலீல் ரஹ்மான் தலைமையேற்க பாரதியின் புரவலர் அல்ஹாஜ்.சாகுல் அமீது, A.S.பிள்ளை ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

இவ்விழா சிறப்பாக அமைய பாரதியின் நிறுவனர் ஜகன்னாதன்,ஆலோசகர்கள் வீரமணி,மருத்துவர் சிவராமன் லட்சுமணன் மற்றும் பாரதியின் செயற்குழு உறுப்பினர்கள் கதிரேசன், முனீஸ்வரன், முரளி கிருஷ்ணன், முருகப்பன், ஸ்ரீதர், சித்ரா செந்தில்குமார், வித்யா அனந்தராமன் மற்றும் சங்கீதா ஸ்ரீகாந்த் ஆகியோர் பேருதவி புரிந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

படத்தொகுப்பு:
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-