அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பாகிஸ்தானில், அந்நாட்டு அரசு 4 லட்சம் ஆபாச வலைத்தளங்களை உடனடியாக நீக்கி உத்தரவிட்டிருக்கும் செய்தி வரவேற்கதக்கதாக உள்ளது.

உலகத்தையே இறைவன்தான் இயக்குகிறான் என்பது உண்மையோ இல்லையோ, கம்ப்யூட்டர்தான் இயக்குகிறது என அனுபவப்பூர்வமாக தற்போது உலகமே நம்புகிற அளவிற்கு, கம்ப்யூட்டரின் பணி மற்றும் செயல்பாடுகள் அனைத்து துறைகளிலும் நீக்கமற நிறைந்துவிட்டது.

வானிலை ஆராய்ச்சியாகட்டும், பூமிக்குள் உள்ளனவற்றை கண்டறிவதாகட்டும், கல்வித்துறையாகட்டும், போக்குவரத்து துறையை சார்ந்த விமானம் மற்றும் ரயில் போன்றவற்றை இயக்குவதாகட்டும், வங்கி சேவையாகட்டும், இமெயில் போன்ற அலுவலக உபயோகமாகட்டும், ஊடகத்துறையாகட்டும், தொழிற்சாலைகளில், வணிக நிறுவனங்களில், மருத்துவத்துறை என மனிதனின் ஆதி முதல் அந்தம் வரை ஒவ்வொரு செயலிலும் உடனிருந்து உதவுவது கம்ப்யூட்டர் என்றால் மிகையாகாது.

எந்த அளவிற்கு உதவுகிறதோ அதேபோல சில ஆபத்துக்களும், அசுரவேகத்தில் பரப்பும் தன்மையும், கெடுதல் விளைவித்தலும் ஏற்பட்டு மனித சமுதாயத்திற்கு மாபெரும் ஆபத்தை விளைவித்து வருவதும் கம்ப்யூட்டர்தான். உலக அளவில் இது ஒரு சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், பாகிஸ்தானில், அந்நாட்டு அரசு 4 லட்சம் ஆபாச வலைத்தளங்களை உடனடியாக நீக்கி உத்தரவிட்டிருக்கும் செய்தி வரவேற்க்கதக்கதாக உள்ளது. இளைஞர்கள் பாழாவதை தடுக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

இந்தியாவிலும் கூட பல்வேறு குற்றங்கள், குறிப்பாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ள ஆபாச வீடியோ படங்கள், காட்சிகள், புகைப்படங்கள் போன்றவை, மிகவும் எளிதில் சுலபமாக இன்டர்நெட்டில் கிடைப்பதால் இளைஞர்கள், மாணவர்கள் வழிதவறி செல்ல வழிவகுப்பதை உணர்ந்தும், பல்வேறு சமூக அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்றும், இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 12–ன் கீழ், இந்தியாவில் 857 ஆபாச இணையதளங்களை முடக்கிய மத்திய அரசு, பின்னர் எழுந்த சில எதிர்ப்புகளால் அதில் உறுதியாக இல்லாமல்போய்விட்டது.

இந்நிலையில், பாகிஸ்தானிடமிருந்தாவது பாடம் கற்று, வருங்கால இளைய சமுதாயத்தின் ஆரோக்கியம் கருதியும் எந்தவித மாற்று கருத்துக்கும் இடமளிக்காமல் பாரத பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து, ஆபாச இணைய தளங்கள் அனைத்தையும் முடக்க வேண்டும்.

யோகா கற்க சொல்லும் மோடி அரசு இதனை தடுக்காவிட்டால் எப்படி


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-