அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



 




ஐம்பது வருடங்களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்பு, குத்துச்சண்டை, ஆகி யவற்றை வாலிபர்கள் கற்றுக் கொண்டு உடலமைப்பை பராமரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சி கள் வந்தன. தற் போது ஜிம் மில் 5 முதல் 10 மணி வரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உடலமைப்பை உருவா க்குவ தில்

இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சமீப காலமாக படங்களில் பாலிவுட்டில் அமீர்கான், சல்மா ன்கான், கோலிவுட்டில் சூர்யா, பரத் போன்ற நடிகர்கள் சிக்ஸ் பேக் உடலமைப்பை காட்டும் வ கையில் நடித்தனர். இந்த சிக்ஸ் பேக் ஆசை, இன்றைய இளைஞ ர்களிடம் தீயாக பரவியுள்ளது. அழகின் முகவரி எது என்று கேட் டால் சிக்ஸ் பேக் என்பார்கள். அந்தளவுக்கு சிக்ஸ்பேக் மீது பைத்திய மாக இருக்கிறார்கள்.

அதற்காக ஸ்டீராய்டு என்கிற ஊக்க மருந் தைப் பயன்படுத்துகிறார்கள். இது உயிரு க்கே ஆபத்தானது என்கிறார்கள் மருத்து வர்கள்.

பொதுவாக உடலில் சேரும் கொழுப்பு உடலியக்கத்தின் மூலம் இயல்பாக கரை ந்து போகும். சில சமயங்களில் கரையா மல் ஆங்காங்கே சேர்ந்து போகும். இப்படி சேரும் கொழுப்பைக் கரைத்து தசைகளா க வயிற்றுபகுதியில் உருமாற்றுவது தான் சிக்ஸ்பேக். ஒருமுறை சிக்ஸ் பேக் கொண்டு வந்து விட்டா லும் அதை தொடர்ச்சியாக பராமரிப்பது கஷ்டம். அதனால் தான் உடற்பயிற்சி மூலம் இ தை பெற வேண்டும். அதற்காக ஒரு சிலர் ஸ்டீராய்டு மருந்து கள் எடுத்து க்கொள் கிறார்கள். அதனால் உடலில் ஹார்மோன் மாற்றங் கள் ஏற்படும் ஆபத்து உண்டு.

ஆண்மைக்கு காரணமாக இருக்கும் ஹார்மோன் டெஸ்டோ டீரோன் இயல்பாக சுரக்கும் இந்த ஹர்மோனை அதிக அள வில் சுரக்க செய்வது ஸ்டீராய் டு. இந்த ஹார்மோன் அதிகம் சுரந்தால் உடல் எடை கூடும். தசைகள் அளவில் பெரிதாகு ம். அதன்மூலம் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பயங்கரமா னவை..முதலில் ஏற்படுவது ஆண்மைக்குறைவு தான். மலட் டுத்தன்மை, குரல் மாற்றம், கல்லீரல் கேன்சர், மார்பில் அதீத ரோம வளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி, பார்வைக்குறைபாடு, போன்றவை ஏற்படவும் வாய்ப் புள்ளது. அழகான ஆரோக்கிய மான உடலுக்கு அன்றாடம் எளி தான உணவு வகைகளும் இயல் பான உடற்பயிற்சியுமே போதும் என்கிறார்கள் மருத்து வர்கள்.

இது குறித்து ஊட்டச்சத்து நிபு ணர் சொல்லுவது.

சிக்ஸ் பேக் உடலுக்கு தயாராகு பவர்கள், உடலில் உள்ள கொழுப்பை ஒன்பது சதவிகிதம் ஆகவும், நீரின் அளவினை 40 சத வீகிதம் அளவுக்கு குறைத்தே ஆக வேண்டும். மேலும் புரதச்சத்தை மட்டும் அதிகம் எடுத்து கொள்வ தால் கல்லீரல், சிறுநீரகம், இரண் டும்கடும்பாதிப்புக்குள்ளாகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் முற்றி செய லிழந்து விடக்கூடிய அபாயமும் இருக்கிறது. அதிகளவு உடற் பயி ற்சி செய்யும்போது உடலின் வெப் பம் அதிகரிக்கும் இவ்வாறு கூறுகி றார்கள்.

எலும்பு சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறியது.

சர்க்கரை, தண்ணீர், உப்பு ஆகிய மூன்றையும் நீக்கிவிட்டா ல் உயிர் வாழ்வது க டினம் தான். அதிலும் புரதம், மாவுச்சத் து, இல்லாமல் கடும் உ டற்பயிற்சி செய்யும் போது உடலின் தசை நார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கு ம். மனிதனுக்கு வலிமையான தசைநார்களே தேவை. உடல் வலி, காயம், ஏற்படுவதைத் தடுக்கவும் முதுகுவலி வராமல் காக்கவும் தசை நார்கள் பயன் படுகின்றன.

ஆனால் சிக்ஸ் பேக் வைப்பதால் தேவை இல்லாத வலிகள், பிரச் சனைகள்தான் அதிகம். அழகுக் கு ஆசைப்பட்டு தான் சிக்ஸ் பேக் மாயையில் இளைஞர்கள் படை யெடுக்கின்றனர். ஆனால் நிரந்தர அழகுக்கு ஒருவர் முறை யாக உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்குள் வைத்திருத் தலே முக்கியம். சிக்ஸ்பேக் அழகு என்பது தற்காலிகமான தே, நீடித்தது அல்ல. அழகை விட ஆரோக்கியமே முக்கியம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-