அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ரயில் முன்பதிவிற்கு அடையாள அட்டையாக பான் நம்பரை தெரிவிப்பவரா நீங்கள்...? இதோ உங்களுக்கான எச்சரிக்கை செய்திதான் இது.

நீங்கள் உங்கள் முன்பதிவிற்கு பான் (PAN - நிரந்தர கணக்கு எண்) நம்பரைத் தரும் பொழுது அது சில விஷமிகளால் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் பயணிக்கும் பெட்டியில் ரயில்வே நிர்வாகம் உங்கள் பெயர், முகவரி, வயது, அடையாள அட்டை எண் ஆகியவற்றை ஒட்டி வைத்திருக்கும்.

நீங்கள் பான் நம்பரை முன்பதிவின் பொது கொடுத்திருந்தால், உங்கள் பான் நம்பர் மற்றும் உங்கள் பெயர், முகவரி, வயது ஆகியவை அந்த ரயில் பெட்டியில் ஒட்டபட்ட தாளில் இருக்கும்.

இங்குதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. ரயில் பெட்டியில் ரயில்வே நிர்வாகம் ஒட்டும் பயணிகளின் விவரத்தில், சில விஷமிகள் பான் நம்பரை தவறாகப் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

எப்படி?

ரூபாய் 2 லட்சத்துக்கும் அதிகமாக தங்க நகைகளை வாங்குவோர் கட்டாயம் பான் எண் தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை மத்திய நிதி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த உத்தரவு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து செயல்பட்டு வருகிறது. கடன் அட்டை மூலம் தங்க நகை வாங்கினாலும் கட்டாயம் பான் எண் விவரம் அளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

இதனால் சில பெரிய முதலீட்டாளர்களுக்கு, நகை விற்பனையாளர்கள் ரயில் பெட்டியில் நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களை பயன்படுத்துகின்றனர். அதுமட்டும் இல்லாமல் வருமான வரியிலிருந்து இருந்து தப்பிப்பதற்காகவும் பான் நம்பர் தவறுதலாக பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.
ரயில் பயணத்தில் குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களின் பான் நம்பர் விபரங்களை மட்டும் சேகரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுவும் ஸ்லிப்பர் கிளாஸ்-ல் கிடைக்கும் விபரங்களை மட்டும் விஷமிகள் சேகரிப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் ஸ்லிப்பர் கிளாஸ்-ல் பயணிப்பவர்கள் பெரும்பாலும் வருமான வரி செலுத்துமளவிற்கு வருமானம் இருக்காது மற்றும் அவர்கள் வேலைக்கு செல்பவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதால் இவர்களிடம் இருந்து பான் நம்பர் விவரங்களை சேகரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

பெரியோர்களே, தாய்மார்களே...

எனவே பெரியோர்களே, தாய்மார்களே ரயில் பயணத்தின் போது உங்கள் விபரங்கள் இது போல் பயன்படுத்தப் பட்டால் வருமான வரித்துறையிடமிருந்து உங்களுக்குதான் பிரச்னை வரும். ஆகையால் ரயிலில் பயணம் செய்யும் பொழுது வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் அல்லது குடும்ப அட்டை போன்ற ஏதாவது வேறு ஒன்றை அடையாள அட்டையாக காட்டவும்.

ஏனெனில் பான் கார்டு பயன்படுத்துவதன் மூலம் வங்கி, பண நடவடிக்கை, வரி பரிவர்த்தனை, கடன், முதலீடு என அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கண்காணித்து வருவதால் உங்கள் பான் நம்பரின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுங்கள்.

சோ.கார்த்திகேயன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-