அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பேரீச்சை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். பேரீச்சையில் உள்ள மருத்துவ குணம் நிச்சயமாக வேறு எந்த பழத்திலும் கிடையாது. இரும்பு சத்துள்ள பழங்களில் சட்டென நம் நினைவுக்கு வருவது பேரீச்சை பழம்தான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பேரீச்சை சவுதி அரேபியா, சஹாரா, ஈரான், ஈராக், ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், சூடான், எகிப்து, பகரைன், லிபியா, சிரியா, ஜோர்டான், அல்ஜீரியா, மொரோக்கோ, ஸ்பெயின், கிரீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அரேபிய நாடுகளில் மட்டுமே வளரக்கூடியது பேரீச்சை மரம் என நம்பி கொண்டிரு க்கிறோம். அரபு நாடுகளில் மிக அதிக அளவில் பயிரிடப்படும் பேரீச்சை தற்போது நமது இந்தியாவிலும் பயிரிடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 3ஆயிரம் ஏக்கரிலும், வடமாநில ங்களில் சுமார் 500 ஏக்கர் பேரீச்சை நடப் பட்டு நன்கு காய்த்து வருகிறது. அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வளரக்கூடியது பேரீச்சை. இயற்கை உரம், சிறிதளவு தண்ணீர் இருந் தால் போதுமானது. தண்ணீர் பற்றாக்குறையால் எந்த பயிரையும் சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு சரியான மாற்றாக பேரீச்சை சாகுபடி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.பேரீச்சையில் விதை மூலம் உற்பத்தி செய்யும் விதைகன்றுகள், வாழை மரத்தில் அடிவாழை வருவது போல பேரீச்சை மரத்தில் அடியில் அதனை சுற்றி பக்கக்கன்றுகள் வெளிவரும். அதனை இரண்டாண்டுகள் மரத்தை ஒட்டியே வளரவிட்டு பெயர்த்து எடுத்து நடலாம். திசு வளர்ப்பு கன்றுகள் ஆய்வகத்தில் வளர் பெருக்கம் செய்யப்படும் கன்றுகளாகும். பூச்சி நோய் தாக்காத அதிக மகசூல் தரும் சிறந்த சுவையுடைய தாய் மரத்தில் இருந்து திசுக்களை எடுத்து ஆய்வகத்தில் பெருக்கம் செய்து பின்னர் நர்சரியில் பதப்படுத்தி நடவுக்கு எடுத்து செல்லாம்.விதைகன்றுகள் விதை மூலம் உற்பத்தி செய்யும் கன்றுகள் வளர்ந்து மகசூல் தர 5 முதல் 6 வருடங் கள் ஆகும். இந்த முறையில் துரிதமாகவும், அதிக அளவில் கன்றுகள் உற்பத்தி செய்ய முடியும்.

நன்கு மகசூல் தரக்கூடிய 50 வயது கடந்த தாய் மரத்தில் இருந்து விதை எடுக்கப்பட்டு நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இதில் பாரம்பரிய குணம் மாற வாய்ப்புள்ளது. ஆண் மரம், பெண் மரம் வித்தியாசம் காண இயலாது. பக்க கன்றுகள் ஒரு தாய் மரம் தனது ஆயுளில் 5முதல் 18 ஆண்டுகள் வரை கிளைக் கன்று கள் தரும். 10 முதல் 30 வரை பக்க கன்றுகள் எடுக்கலாம். தாய் மரத்தின் குணம் அப்படியே இருக்கும். ஆண் பெண் அடையாளம் கண்டு நடலாம். 3 ஆண்டுகளில் பலன் தரும். திசுவளர்ப்பு கன்றுகள் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான கன்றுகள் ஆய்வ கத்தில் உற்பத்தி செய்யலாம். மிக சிறந்த தாய் மரத்தில் இருந்து திசுக்களை எடுத்து ஆய்வ கத்தில் உற்பத்தி செய்வதால் அதன் குணம் அனைத்து கன்-று-களிலும் மாறாமல் அப்படியே இருக்கும். ஆனால் ஆய்வகத்திலேயே 4 ஆண்டுகள் உற்பத்தி காலம் எடுத்து கொள்வதால் இதன் விலை சற்று அதிகம்.

அஜூவா, மஸ்கட், சுக்ரி ரகங்கள் ஆகும். விதை, திசுவளர்ப்பு, பக்க கன்றுகள் ஆகும். ஜுலை, ஆகஸ்டு நடவு காலமாகும். தண்ணீர் வசதி இருந்தால் எப்பொழுதும் நடலாம். விதைகன்று முதல் காய்ப்பு 6 வருடமாகும். முதல் காய்ப்பு 3 முதல் 4 வருடமாகும். திசு வளர்ப்பு கன்று முதல் காய்ப்பு 2 முதல் 3 வருடமாகும். குழி அளவு 2 அரை அடி* 2 அரை அடி* 2அரை அடியாகும். இடை வெளி 20 அடி * 20 அடி (அல்லது 25 அடி * 25 அடி (அல்லது) 30 அடி * 30 அடி இடை வெளியாகும். நட்ட முதல் ஆண்டு வாரம் 2 முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பிறகு 15 முதல் 25 நாட்கள் இடை வெளியில் சொட்டு நீர் பாசனம் மிகசிறந்ததாகும்.உர நிர்வாகத்தில், கன்று பருவத்தில் வருடம் இரு முறை மரம் ஒன்றுக்கு 50 கிலோ தொழு உரம் அல்லது 20 கிலோ மண்புழு உரம் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு இட வேண்டும். 4ம் ஆண்டு முதல் 100முதல் 150கிலோ தொழு உரம் அல்லது 25கிலோ மண்புழு உரம் ஆண்டு க்கு இரு முறையாகும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-