அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு பேரூராட்சி அலுவலகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் 11 பேரின் ராஜீனாமா கடிதத்தை ஏற்க வலியுறுத்தியும்,3 மாத காலமாக பேரூராட்சி கூட்டம் நடத்தாத செயலற்ற லப்பைக்குடிக்காடு பேரூராட்சி மன்றத்தை கலைக்க வேண்டும் என்றும் கூறி பேரூராட்சி தலைவரின் அறையை பூட்டி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் வார்டு கவுன்சிலர்கள் அ.தாவூத் அலி (முஸ்லீம் லீக்),அ.மீராமொய்தீன்(ம.ம.க.),அ.ஜாபர் உசேன் (அ.தி.மு.க.),அ.ஜாகீர் உசேன் (தி.மு.க.), தாஜிதீன் (சுயேச்சை) சாகுல் அமீது (ம.ம.க.), அ.ஜூனா பாபு (காங்கிரஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் பேரூராட்சி உதவி இயக்குனர் வரும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பேரூராட்சியின் உதவி இயக்குனர் அலுவலக வேலையாக சென்னை சென்றுள்ளதால் அவர் திரும்பி வந்த உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-