அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
File. 


குன்னம் அருகே உரிய நேரத்துக்கு வராத அரசுப் பேருந்தை சிறைபிடித்து, கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பீல்வாடி, அருமடல், சிறுகுடல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும், பெரம்பலூர் - வேப்பூர் வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இந்த அரசுப் பேருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் காலதாமதமாக இயக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் கல்லூரிக்கு உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் மாணவிகள் அவதிக்குள்ளாகி வந்தனராம். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவிகள் வேப்பூர்- நன்னை சாலையில் இயக்கப்பட்ட அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கல்லூரி முதல்வர் சுப்ரமணி மற்றும் போலீஸார் அப்பகுதிக்கு சென்று, கல்லூரி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, மாணவிகள் மறியலை விட்டு கலைந்து சென்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-