அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 


புதுடெல்லி,

டெல்லி புறநகர் பகுதி குர்கானில் உள்ள பகதூர்கர் நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் 23 வயது கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை அவருக்கு குழந்தை பிறந்தது.

அந்த இளம் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததால், அவர் ஆஸ்பத்திரியின் முதல் மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிகாலை மருத்துவமனை முன்பு சொகுசு கார் ஒன்று வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய நபர் நேராக தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்தார். அங்கு வரிசையாக படுக்கைகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை அந்த நபர் பார்த்தார்.

குழந்தை பெற்றிருந்த பெண்ணை பார்த்ததும் அவர் சுற்றும், முற்றும் பார்த்தார். தீவிர சிகிச்சை பிரிவில் எல்லாரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அதை பயன்படுத்தி அவர் அந்த இளம் பெண்ணை கற்பழித் தார். அந்த பெண் குழந்தை பெற்ற சில மணி நேரத்துக்குள் இந்த சம்பவம் நடந்தது. பிறகு அந்த மர்ம மனிதர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி காரில் ஏறி சென்று விட்டார். அந்த நபர் வந்தது. பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது. அனைத்தும் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகியுள்ளது.

தூக்கம் வர மருந்து கொடுத்திருந்ததால் அந்த பெண் பாதி மயக்க நிலையில் இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. மயக்கம் முழுமையாக தெளிந்ததும் அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி கணவரிடம் தெரிவித்தார். அது பற்றி குர்கான் நகர போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் மருந்துவ மனை கண்காணிப்பு காமிரா வில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம மனிதரை பிடிக்க விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-