அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 சென்னை: ஆபாச புகைப்படம் வெளியான நிலையில், ரமணாவிடம் இருந்து அமைச்சர் பதவியையும், மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் அதிமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் பி.வி.ரமணா. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக ரோஜாப் பூவால் உடலை மறைக்கும் வகையில் அமர்ந்திருப்பது போன்று புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவியது. அந்த படங்கள் அனைத்தையும் யாரோ ஒருவர் ரமணா முன்பு நின்று எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் வெளியான விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் ரமணாவின் புகைப்படங்கள் முதல்வர் ஜெயலலிதா பார்வைக்கு சென்றதாக கூறப்படுகிறது. உடனடியாக, முதல்வர் ஜெயலலிதா ரமணாவை அழைத்து கண்டித்துள்ளார். மேலும் சட்டசபைக்கும், தலைமை செயலகத்துக்கும் வரக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தார். இதனால் ரமணா நேற்று முன்தினமும், நேற்றும் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், ரமணாவை அமைச்சர் பதவியில் இருந்தும், மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி முதல்வர் ஜெயலலிதா நேற்று மாலை உத்தரவிட்டார். இதுகுறித்து தமிழக கவர்னர் ரோசய்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,‘‘தமிழக பால் வளத்துறை அமைச்சர் ரமணா அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவர் வைத்திருந்த பால்வளத்துறை பொறுப்பை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மோகன் கூடுதலாக கவனிப்பார்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் ரமணா இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அந்த பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான வாலாஜாபாத் கணேசன் கவனிப்பார்’’ என கூறியுள்ளார். ஏற்கனவே 2011ம் ஆண்டு முதல் முறையாக அமைச்சர்கள் பொறுப்பேற்ற போது, ரமணாவுக்கு முக்கிய இலாகாவான சுற்றுச்சூழல் மற்றும் வணிகவரித்துறை ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக அந்த பதவியை வகித்து வந்தார். கட்சி தலைமைக்கு விசுவாசமாக செயல்பட்டதால் அவரால் தலைமைக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால்

19வது முறையாக மாற்றம் 2011 மே மாதம் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். ஆட்சி முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் 19வது முறையாக அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். தற்போது ஜெயலலிதா உட்பட அமைச்சர்களின் எண்ணிக்கை 28ஆக குறைந்துள்ளது. இதில் இடையில் பல அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், காமராஜ், தங்கமணி, மோகன் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு பல புகார்களை அனுப்பினர். அதன் விளைவாக 2014 மே 19ம்தேதி அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்படடார். இந்த சம்பவம் நடந்து சில மாதங்களில் இதே திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பால்வளத்துறை அமைச்சராக இருந்த மூர்த்தி பால் கலப்பட ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பதவியை இழந்தார். இதையடுத்து ரமணா மீண்டும் 2014 செப்டம்பர் 6ம்தேதி பால்வளத்துறை அமைச்சரானார். அதிமுகவை சேர்ந்த அரசியல் எதிரிகள் ரமணாவை சிக்க வைக்க பல வலைகளை விரித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளருக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. அவர், ரமணாவின் உதவியாளர் போல இருந்தார். அவரைத்தான் ஒன்றியச் செயலாளராக ரமணா நியமித்தார். பின் கருத்து வேறுபாடு காரணமாக ஒன்றியச் செயலாளர் பதவியை ரமணா பரிந்துரையின்பேரில் சில நாட்களுக்கு முன் ஜெயலலிதா பறித்து உத்தரவிட்டார். அவரிடம் ரமணா குறித்த சில தகவல்கள், படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதுதான் தற்போது வெளியானதாகவும் கூறப்படுகிறது. இதனால் படங்கள் வெளியானதற்கு, அந்த ஒன்றியச் செயலாளர்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், இந்தப் படங்கள் குறிப்பாக தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் அமைச்சர் ஒருவரே பெண் ஒருவருடன் மெத்தையில் பூக்களுக்கு மத்தியில் இருப்பது போன்ற புகைப்படம் கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என அதிமுக தலைமை கருதியதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-