அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
 
குன்னம்,

குன்னம் அருகே தாயின் பிணத்தை ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மகன் பலியானார். அந்த வாகனத்தின் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சொர்க்கரத வாகனம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கிழுமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பூங்கா நகரை சேர்ந்தவர் செல்லமுத்து மனைவி பொன்னம்மாள்(வயது 70). இவரது மகன் முருகன்(50). பொன்னம்மாள் கடந்த 24–ந் தேதி இறந்துவிட்டார். இதையடுத்து சொர்க்க ரத வாகனத்தில் பொன்னம்மாளின் உடலை ஏற்றிக்கொண்டு அடக்கம் செய்ய நேற்று முன்தினம் சுடுகாட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனத்தை வேப்பூரை சேர்ந்த சுதாகர் (28) ஓட்டிச்சென்றார். அப்போது சாலையோர பள்ளத்தில் திடீரென எதிர்பாராதவிதமாக அந்த வாகனம் கவிழ்ந்தது. இதில் முருகன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முருகன் இறந்தார்.

சாலை மறியல்

இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்திய வேப்பூரை சேர்ந்த டிரைவர் சுதாகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்த முருகனின் பிணத்தை பூங்கா நகரில் சாலையின் நடுவே வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் விபத்தினை ஏற்படுத்திய டிரைவர் சுதாகரை கைது செய்வோம் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் வேப்பூர் வயலப்பாடி சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து டிரைவர் சுதாகரை குன்னம் போலீசார் கைது செய்தனர். தாயின் பிணத்தை அடக்கம் செய்ய சென்ற போது வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-