அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

சென்னை,


கத்தார் நாட்டுக்கு வேலைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய கண்ணன், ராஜாராம், வீரகுமார், சவரி உள்பட 11 பேர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–


கத்தார் நாட்டில் கொத்தனார், பிளம்பர், கார்பெண்டர் ஆகிய வேலைக்கு ஆள் எடுப்பதாக கூறி தமிழகத்தில் உள்ள ஏஜெண்டுகள் 3 மாத விசா எடுத்து எங்களை அனுப்பி வைத்தனர். நாங்களும் நம்பிக்கையுடன் சென்றோம். முதல் மாதம் முறையாக சம்பளத்தை அங்குள்ள நிறுவனங்கள் கொடுத்தது. ஆனால், அதன்பிறகு எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. 3 மாதத்துக்கு பிறகு விசாவும் காலாவதியாகிவிட்டது. நாங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விசாவை புதுப்பித்து தாருங்கள் என்று கேட்டோம். அதையும் அவர்கள் செய்து தரவில்லை, சம்பளமும் ஒழுங்காக வழங்கவில்லை.


நாங்கள் உடனடியாக இந்திய தூதரகத்திடம் சென்று இதுதொடர்பாக மனு கொடுத்தோம். இதை அறிந்த அந்த நிறுவனங்கள் எங்களை அடித்தார்கள். எந்த தவறும் செய்யாத எங்களை 2 மாதத்துக்கு மேல் ஜெயிலில் வைத்திருந்தார்கள்.


பின்னர், அங்கிருந்தபடி திருட்டுத்தனமாக செல்போன் மூலம் சென்னையில் உள்ள தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தோம். அவர்கள் இந்திய தூதரகத்திடம் மீண்டும் பேசி எங்களை காப்பாற்றி கொண்டு வந்தார்கள். எங்களை போல் யாரும் நம்பி ஏமாற வேண்டாம்.


இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-