அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 


நமது உடலின் மிக முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதே சிறுநீரகங்கள் (கிட்னி) மற்றும் சிறுநீர்ப்பை பற்றிய இந்த மூன்று பதிவுகளுமே.

சிறுநீரகப் பிரச்னை ஆரம்பத்திலேயே தெரியாது. முற்றிய நிலையில் தான் அதன் அறிகுறிகள் தெரியவரும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டால், அது சம்பந்தப்பட்டவரின் மனநிலையை உடைத்து, பயத்திலே அவர்கள் வாழ்க்கையை தொலைத்து விடுவார்கள். அதனால் தான் இதை உயிர்கொல்லி வியாதி என்று கூறுகிறார்கள். இப்படி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயைப் பற்றிய சரியான விழிப்புணர்ச்சி இல்லாமலும், அலட்சியத்தின் காரணமாகவும் ஆரம்பகாலங்களில் விட்டுவிட்டு நோய் மிகவும் முற்றிய நிலையில் அந்த வியாதியின் தீவிரம் உணருவது வேதனையே.

கழிவறை வசதி இல்லாதது.. பயணம் செய்யும்போது.. வேலைப்பளு போன்ற காரணங்களால் சிறுநீரை அடக்குவது பெரும் ஆபத்தில் முடியும்… சமீபகாலமாக சமூக வலைத்தளங்களின் சுவாரஸ்யம் சிறுநீர் கழிப்பதை கூட வெகுநேரம் தள்ளிப்போட வைக்கிறது… அடக்கி வைக்கப்டும் சிறுநீரால் சிறுநீரகங்கள் வேலை அதிகரித்து, அதன் ஆயுள் குறையும். (சிறுநீரை அடக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு.)

அடிக்கடி வலி நிவாரணி (painkiller) மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது.

வாழைத்தண்டு, முள்ளங்கி, கீரைத்தண்டு, பூசணிக்காய், சுரைக்காய்,பீர்க்கங்காய் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குளிர்ந்த நீர் கொழுப்புகளை இறுக்குவதால் ஜீரணிக்க முடியாமல் உடலின் இயக்கத்தை (metabolism) பாதிக்கும். சாப்பிடும்போது கோக், பெப்சி எடுத்துக் கொண்டால் சிறுநீரகக்கோளாறு அவர்களுக்கு கண்டிப்பாக உண்டு.

சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றொரு முக்கியமான விஷயம் புகைப்பிடிக்கும் பழக்கம். எனவே சிறுநீரகத்தை பாதுக்காக்கவேண்டும் என்றால் முதலில் புகை பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும்நமது உணவு முறைகளையும், பழக்கவழக்கங்களையும் மாற்றியமைத்துக்கொண்டால் சிறுநீரக கோளாறுகள் வராமல் தடுக்கலாம்…

ரசாயனம் மிகுந்த செயற்கை உப்பு மிகுந்த துரித உணவு உணவுகள், சிப்ஸ்கள், மசாலா சேர்த்த உணவுப் பொருட்கள் மற்றும் எண்ணெய் பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால் மிகுதியாக உள்ள உப்புக்கள் சிறுநீரகத்தில் சிறுக சிறுக சேர்ந்து சிறுநீரகம் செயலிழிந்துவிடும். சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் அறவே சாக்லேட், காஃபி, டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால் சிறுநீர் வெளியேற்றத்தை தூண்டும், அதே நேரம் யூரிக் ஆசிட் வெளியேறுவதை கட்டுப்படுத்தும். இதனால் சிறுநீரகக் கல் உருவாகும். ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு ஆரோக்கியமான உணவும், உடலும் தேவை. சரியான உணவு, தூக்கம், மலசிக்கலின்மை போன்றவை மிகவும் முக்கியம்.

மாமிசத்தில் உள்ள கொழுப்புகள் பல நோய்களை ஏற்படுத்த காரணங்களாக அமைந்து விடும் வாய்ப்பு உள்ளதால், சைவ உணவே ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு சிறந்தது.

மீன்கள் , உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும்.

முட்டைகோஸ்,
காலிப்ளவர்,
பூண்டு,
வெங்காயம்,
பசலைக்கீரை,
பரங்கிக்காய்,
கேரட் ,
முள்ளங்கி,
ஆப்பிள்,
சீமை களாக்காய்,
தர்பூசணி,
அன்னாசிபழம்,
வெள்ளரிக்காய்,
எலுமிச்சை,
மாதுளை,
பிஸ்தா,
பாதாம்,
இளநீர்

ஆகியவையும் சிறுநீரகத்திற்கு நல்லது. எனவே எப்பொழுதும் பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடலும், உடல் உறுப்புக்களும் ஆரோக்கியமாக திகழும்.

முறையான உணவுப் பழக்கம், எளிய உடற்பயிற்சிகள், தியானம், யோகா போன்ற சில கட்டுப்பாடுகளை வாழ்க்கை முறையோடு இணைத்துக் கொள்ள வேண்டும்.

அக்குபஞ்சர் முறையில் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பை பாதிப்பால் உண்டாகும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, முற்றிலுமாக வெளிவரலாம். மேலும் கை விரல்கள், கால்களில் பாதம், விரல்கள் மரத்துப் போதல், வளர்சிதை மாற்றங்களை முறைப்படுத்துதல், பழுதுப்பட்ட உறுப்புகளையும், தசைகளையும் சீர்படுத்துதல், போன்றவை மிக எளிமையாக மருந்துகளின்றி குணப்படுத்தலாம்.

சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பை பாதிப்பால் உடலில் உண்டான தலைவலி, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், குழப்பமான மனநிலை, சுவாசம் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் அனைத்துமே அக்குபஞ்சர் முறையில் உடலில் மிகச்சரியான, தொடர்புடைய புள்ளிகளை தூண்டுவதன் மூலம் மிகப் பெரிய முன்னேற்றத்தை காண முடியும்.

நாட்பட்ட கிட்னி பிரச்சனைகள் அக்குபஞ்சரில் குணப்படுத்த மிக நீண்ட காலம் ஆகலாம். ஆனால் அவர்கள் உடல் உபாதையிலிருந்து வெகுவாக வெளிவர உதவும். கிட்னியில் பழுது உண்டான சில மாதங்களிலே அக்குபஞ்சர் மருத்துவத்தை நாடினால் அவர்கள் பூரண குணமடையலாம்.

ஒரு மணி நேரத்தில் 15 நிமிடத்துக்கு ஒரு முறை 3 லிருந்து 10 வினாடிகள் வரை அழுத்தம் கொடுத்துக் கொண்டே மூச்சை நன்கு ஆழ்ந்து உள்ளிருத்தி, மெதுவாக வெளி விட வேண்டும். இப்படியே தொடர்ந்து வீட்டில் செய்துக் கொண்டு வருவதால் சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் போன்ற வியாதிகளில் இருந்து மீண்டு வர உதவும். இங்கு குறிப்பிட்ட முறையில் அழுத்தம் கொடுக்கும் போது, அவர்களே தன் உடலில் உண்டாகும் மாற்றங்களை உணர முடியும்.

இது ஒரு ஆரம்பகால தற்காலிக சிகிச்சை மட்டுமே… சிறுநீரக கோளாறுகளில் இருந்து நிரந்தர நிவாரணம் பெற தகுந்த அக்குபஞ்சர் மருத்துவரை அணுகி முறையான மருத்துவம் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வந்தாலே இந்த பிரச்சினைகளில் இருந்து வெளிவருவதோடு, மற்ற உடல் உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கட்டுரையாளருக்கு நன்றி.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-