அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.


இங்கு, திங்கள்கிழமை தோறும் மனுக்கள் அளிக்கவும், இதர நாள்களில் பல்வேறு அலுவலகப் பணிகளுக்கும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில், பெரும்பாலும் உதவித்தொகை கோரி முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் அதிகளவில் வருகிறார்கள்.


இங்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதிக்காக 2 இடங்களில் சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் சுகாதாரமான தண்ணீர் நிரப்புவதில்லை.


இதேபோல, ஒருசில அலுவலகங்களை தவிர பெரும்பாலான அலுவலகங்களில் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்காததால் அரசு அலுவலர்களும், பணியாளர்களும் குடிநீருக்காக மற்ற அலுவலகங்களுக்குச் சென்று பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வெளியே உள்ள கேன்டீனுக்குச் செல்கின்றனர். அங்கும், ஏதாவது சாப்பிட்டால் தான் குடிநீர் தருகின்றனர். இல்லையெனில், பாட்டில் குடிநீர் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கவும், கூடுதலாக சின்டெக்ஸ் தொட்டிகள் அமைத்து தட்டுப்பாடின்றி குடிநீர் நிரப்பவும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-